இரண்டே மாதங்களில் முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஓர் அற்புத ஹேர் மாஸ்க்!

தற்போது தலைமுடி பிரச்சனை பெரும் தொந்தரவான ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு அல்லது தலைமுடி மெல்லியதாவதற்கு மரபணுக்கள், மோசமான டயட், சுற்றுச்சூழல் மாசுபாடு, மோசமான தலைமுடிப் பராமரிப்பு, அதிகப்படியான கெமிக்கல்களை தலைமுடிக்கு பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாகும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டவும், ஆரோக்கியமான உணவுகளை உண்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, கெமிக்கல் பொருட்களின் உபயோகத்தைக் குறைப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மேலும் தலைமுடி அடர்த்தியாக வளர ஏராளமான நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள் உள்ளன.

அதில் ஸ்கால்ப்பில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் அற்புதமான ஹேர் மாஸ்க் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹேர் மாஸ்க்கை போட்டு வந்தால், 2 மாதங்களில் நல்ல பலன் கிடைப்பதைக் காணலாம். முக்கியமாக எந்த ஒரு இயற்கை வழியைப் பின்பற்றும் போதும் பொறுமை அவசியம் என்பதை மறவாதீர்கள்.

தேவையான பொருட்கள் விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் முட்டை மஞ்சள் கரு – 1 தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப் அணிந்து, 2-4 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலச வேண்டும்.

விளக்கெண்ணெய் இந்த ஹேர் மாஸ்க்கில் உள்ள விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் போன்றவை உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் இதில் உள்ள ரிச்சினோலியிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் போன்றவை முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

முட்டை மஞ்சள் கரு முட்டையின் மஞ்சள் கருவும் முடியின் வளர்ச்சிக்கு உதவும். இதற்கு அதில் உள்ள அத்தியாவசிய அமிலங்களும், புரோட்டீன்களும் தான் காரணம். தலைமுடிக்கு அடிக்கடி புரோட்டீன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தால், தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளரும்.

தேன் பலரும் தேன் தலைமுடியை வெள்ளையாக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் அது ஒரு கட்டுக்கதை. உண்மையில் தேன் தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக இருக்கும் மற்றும் மயிர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தலைமுடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். முக்கியமாக தேன் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வலிமையை அதிகரிக்கும்.

எப்போது பயன்படுத்த வேண்டும்? இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை தவறாமல் மேற்கொண்டு வந்தால், இரண்டே மாதங்களில் தலைமுடி நன்கு அடர்த்தியாகி இருப்பதைக் காணலாம். மேலும் இந்த மாஸ்க்கை போட்டு வந்தால், வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிப்பதைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *