மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு!

மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு!

ருடன்  கிழங்கு… கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை என்ற வேறு பெயர்களும் உண்டு. மேலும் பொதுவாக ஆகாய கருடன், ஆகாச கருடன் கிழங்கு  என்றும் சொல்வார்கள்.

நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இந்த மூலிகைக் கிழங்குக்கு ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர் ஏன்  சூட்டினார்கள் என்பது ஆச்சர்ய செய்தி. பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும்; இது இயல்பு. அதே போல் இந்த கிழங்கின் வாசனை பட்டதும் அந்த இடத்தை விட்டு பாம்பு உடனே விலகிச் சென்றுவிடும். இந்தக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். அதேநேரத்தில் இந்தக் கிழங்கு, கட்டி வைக்கும் இடத்தில் கரியமிலவாயுவை தன்னுள் இழுத்து பிராணவாயுவை அதிகமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. ஆக, கெட்ட காற்றை சுத்திகரிக்கும் செயல்திறன் படைத்தது.

மூன்று கைப்பிடியளவு ஆகாச கருடன் கிழங்கு இலையைக் பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்ந்தவுடன், இலையைப் போட்டு, பதமாக வதக்க வேண்டும். அதை சுத்தமாக துணியில் சிறிய மூட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால்… நல்ல நிவாரணம் கிடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *