இரட்டை குழந்தைகள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!!

குழந்தைகள் என்றாலே சந்தோஷம் தான். எவ்வளவு கடினமான தருணங்களையும் கூட நமது குழந்தையின் முகத்தில் மலரும் அந்த மழலை சிரிப்பை கண்டால் துரத்தி விரட்டிவிடலாம். அதுவே, இரட்டை குழந்தைகள் என்றால் கூறவே வேண்டாம், கண்ணா ரெண்டாவது லட்டு’வ யார் தான் வேண்டாம் என்று மறுப்பார்கள்.

இரட்டையர்கள் சேட்டையிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பார்கள். அதுவும் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் என்றால் தலை வலியும் கூட இரண்டு மடங்கு வந்துவிடும். குறும்பு செய்வது எல்லாம் அவர்களுக்கு கரும்பு சாப்பிடுவதை போல. இப்படி இருக்கும் இரட்டையர்கள் சார்ந்த சில ஆச்சரியமூட்டும் விஷயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…..

ஒரே டி.என்.ஏ

உங்களுக்கு தெரியுமா இரட்டை குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான டி.என்.ஏ தான் இருக்குமாம். ஆனால், கை ரேகைகள் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கும்.

இரு தந்தைகளின் மூலமும் இரட்டையர்கள் பிறக்கலாம்…

பெண்ணின் அண்டவிடுபின் (ovulation) போது, அந்த பெண் ஒருவருக்கும் மேலான ஆணுடன் உடலுறவுக் கொள்ளும் பட்சத்தில், இருவரின் விந்தும் கருவினை எட்டும் போது இரட்டையர்கள் பிறக்க வாய்ப்புகள் இருக்கிறதாம். (அடடே!!! ஆச்சரியக்குறி!!!)

முப்பது வயதுக்கு மேல்

முப்பது வயதுக்கு மேல் கருவுறும் பெண்களுக்கு இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். 1976ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில், 76% இரட்டையர்கள் பிறப்பது அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. அதிலும் முப்பது வயதுக்கு மேல் கருவுற்ற பெண்களுக்கு தான் அதிகம் இரட்டையர்கள் பிறந்துள்ளது.

தனி மொழி

இரட்டை குழந்தைகள் தங்களுக்கென தனி மொழியை அறிந்து வைத்திருகிறார்களாம். அதை ஆராய்ச்சியாளர்கள் "cryptophasia" என்று கூறுகிறார்கள். 40% இரட்டை குழந்தைகள் தங்களுக்கான தனி மொழியை அறிந்து வைத்திருக்கிறார்கள் என "Journal Institute of General Linguistics" என்ற பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

கண்ணாடிப் போல

சில இரட்டையர்கள் கண்ணாடியில் நாம் பிரதிபலிப்பதை போல இருப்பார்களாம். இவர்களை "மிர்ரர் இமேஜ் ட்வின்ஸ்" என்று கூறுகிறார்கள். உதாரணமாக, ஒருவருக்கு வலது பக்கம் இருக்கும் மச்சம் மற்றொருவருக்கு இடது பக்கம் இருக்கும். ஒருவர் இடது கை பழக்கமும், மற்றொருவர் வலது கை பழக்கமும் உள்ளவராக இருப்பார்கள்.

அம்மாவின் ஆயுட்காலம் அதிகரிக்கும்

இரட்டையர்களை பெற்றெடுத்த அம்மக்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கடந்த 1800 – 1970 வரை இடைப்பட்டு இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்களை குறித்து செய்யப்பட்ட ஆய்வில் அவர்களது ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

கருவில் கட்டிப்பிடித்து

கருவில் இருக்கும் போது இரட்டையர்கள் கட்டியனைத்து தான் இருப்பார்களாம்.

கருவிலேயே பேசிக் கொள்வார்கள

கருவில் இருக்கும் போதே இருவருக்குள்ளும் உரையாடுதல் இருக்குமாம். பிரசவ காலத்தின் 14வது வாரத்தில் இருந்தே இவர்களுக்குள்ளான உரையாடல்கள் தொடங்கிவிடுகிறதாம்.

இரட்டையர்களுக்கு இரட்டைக் குழந்தை

இரட்டையர்களாக பிறந்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் இரு மடங்கு அதிகமாம்.

நைஜீரியா

நைஜீரியாவில் இரட்டையர்கள் பிறக்கும் விகிதம் அதிகமான நாடாக திகழ்கிறது. இரட்டையர்கள் மட்டுமின்றி அதற்கும்மேலான குழந்தைகள் ஒரே பிரசவத்தில் அதிகம் பிறக்கும் நாடும் நைஜீரியா தான்.

குறை பிரசவம்

பெரும்பாலான இரட்டைக்குழந்தைகள் குறை பிரசவமாக தான் பிறக்கின்றனர். பெரும்பாலும் 37வது வாரத்திற்குள் இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிடுவதாக ஓர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *