மெஹந்தி நிறம் பிடிப்பதில்லையா..?

எப்போது மெஹந்தி போட்டாலும் எனக்கு நல்ல நிறம் பிடிப்பதே இல்லை. என்ன கோளாறாக இருக்கும்? கடைகளில் ஸ்பெஷலாக ஏதேனும் கலப்பார்களா நிறம் வருவதற்கு? இது குறித்து மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கல்யாண பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்வது என்பது ஒரு சடங்காக ஆகிவிட்டது. அந்த மணப்பெண்ணின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தால், அப்பெண்ணின் வருங்கால கணவன் அவளை மிகவும் நேசிப்பான் என்பது பழமொழி.

நல்ல கலர் வருவதற்கான சில உத்திகளையும் சொல்ல வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு சிறிது மெஹந்தி ஒயில் தடவவும்.

மெஹந்தி போட்டு சிறிது உலரத் தொடங்கும் முன், லெமன் ஜூஸ் + சீனிக் கரைசலை சிறிது பஞ்சினால் நனைத்து டிசைன் மேல் தடவ வேண்டும். இதே போல 7 –8 முறை செய்யவும். மருதாணி டிசைன் குறைந்தது கைகளில் 6–7 மணி நேரம் இருக்க வேண்டும்.

பிறகு முனை மழுங்கிய கத்தியால் சுரண்டி எடுத்த பிறகு, ஒரு இரும்பு தவாவில் 10 கிராம்பு போட்டு வதக்கவும். அப்போது வரும் புகை மேல் மருதாணி இட்ட கைகளை காண்பிக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் கையில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (குறைந்தது 5–6 மணி நேரம்). ஆரஞ்சு கலரில் இருந்த மருதாணி டிசைன் சிறிது சிறிதாக சிவப்பு நிறம், பிறகு டார்க் பிரவுன் ஆக மாறும்.

இதுதான் ரியல் மருதாணி கலர். குளிர்ச்சியான உடல்வாகு இருப்பவர்க்கு மெஹந்தி டார்க் ஆக சிவக்காது. ஆனால், மேற்சொன்னபடி செய்தால், கண்டிப்பாக நல்ல கலர் வரும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை!

ப்ளீச், எண்ணெய், சோப்பு போன்றவற்றை மெஹந்தி போட்ட கைகளில் உபயோகப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்

கடைகளில் விற்கும் மெஹந்தி கோன்களில் தரம் பார்த்து வாங்கவும். சில மெஹந்தி பேஸ்டில் நல்ல கலர் வருவதற்காக சில கெமிக்கல்ஸ் கலப்பதாக சொல்லப்படுகின்றது.

வீதியில் இருக்கும் மெஹந்தி வாலாக்கள் சிலர் சுண்ணாம்பு கரைசலை மெஹந்தியில் கலப்பதாகவும் வதந்தி இருக்கிறது. இதனால் சரும அலர்ஜி வர வாய்ப்புகள் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *