உங்களின் முழங்கை மற்றும் முழங்கால் கருமையாக உள்ளதா? அதை நீக்க இதோ சில அற்புத வழிகள்!

Loading...

உங்களின் முழங்கை மற்றும் முழங்கால் கருப்பா இருக்கா? இதனால் உங்கள் கை மற்றும் கால்களின் அழகே பாழாகிறதா? பொதுவாக முழங்கை மற்றும் முழங்காலில் இறந்த செல்கள் அதிகமாக தேங்குவதால் தான், அவ்விடங்கள் மட்டும் கருமையாக உள்ளது. மேலும் அவ்விடங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், முழங்கை மற்றும் முழங்கால் அதிக வறட்சிக்குள்ளாகி, அப்பகுதிகளில் அழுக்குகள் சேர்ந்து, எளிதில் நீக்க முடியாதவாறு படிந்துவிடுகின்றன.

உங்களின் முழங்கை மற்றும் முழங்கால் கருப்பா இருக்கா? இதனால் உங்கள் கை மற்றும் கால்களின் அழகே பாழாகிறதா? பொதுவாக முழங்கை மற்றும் முழங்காலில் இறந்த செல்கள் அதிகமாக தேங்குவதால் தான், அவ்விடங்கள் மட்டும் கருமையாக உள்ளது. மேலும் அவ்விடங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், முழங்கை மற்றும் முழங்கால் அதிக வறட்சிக்குள்ளாகி, அப்பகுதிகளில் அழுக்குகள் சேர்ந்து, எளிதில் நீக்க முடியாதவாறு படிந்துவிடுகின்றன. பலரும் தங்கள் முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையைப் போக்க பல க்ரீம்களை தடவுவார்கள். ஆனால் அப்பகுதிகளில் உள்ள கருப்பை ஒருசில எளிய வீட்டுப் பொருட்களைக் கொண்டே நீக்கலாம். இங்கு முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையை நீக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் கை, கால்களை அழகாக பராமரியுங்கள்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் கருமையாக உள்ள முழங்கை மற்றும் முழங்காலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் கருமையைப் போக்கலாம்.

எலுமிச்சை மற்றும் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள முழங்கை மற்றும் முழங்காலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை கருமையை எளிதில் போக்கும் மற்றும் கடலை மாவு இறந்த செல்களை வெளியேற்றும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு, அந்த எண்ணெயைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி வர, அப்பகுதிகளில் உள்ள கருமை விரைவில் அகலும்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, அக்கலவையைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி மென்மையாக வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவைக் கொண்டு ஸ்கரப் செய்தால், இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, கருமை மெதுவாக மறைய ஆரம்பிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி ஸ்கரப் செய்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தயிர்

தயிர் மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசர். அதனைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களுக்கு பராமரிப்பு கொடுத்தால், வறட்சி மறையும். அதிலும் தயிர் மற்றும் வினிகரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா

புதினா மற்றொரு பிரபலமான முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையைப் போக்க உதவும் பொருள். மேலும் புதினாவில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், அது இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, முழங்கை மற்றும் முழங்கால்களின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close