விரல்கள் செய்யும் விந்தை மான் முத்திரை!!

Loading...

விரல்கள் செய்யும் விந்தை
மான் முத்திரை

கைகளில் இந்த முத்திரை செய்யும்போது, மான்போல தோன்றுவதால் `மான் முத்திரை’ எனப் பெயர். இதை `ம்ருஹி முத்திரை’ என்றும் சொல்வர்.

எப்படிச் செய்வது?

கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.

கட்டளைகள்

நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம்.

காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.

பலன்கள்

பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் பெருங்குடலின் கடைமடைப் பகுதியில் இசைவுத்தன்மையை உண்டாக்கி, இலகுவாக மலம் வெளியேற உதவும். மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.

நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும்.

அதீத இயக்கம் (Hyperactivity) கொண்ட குழந்தைகளை,  கட்டுப்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு காலை, மாலை 20 நிமிடங்கள் மான் முத்திரை செய்யச் சொன்னால், அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்புவர்.

அளவுக்கு மீறிய குறும்புத்தனம், ஓர் இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பது, எந்த வேலையையும் முழுமையாக முடிக்காமல் அடுத்தடுத்த வேலைகளுக்குச் சென்றுவிடுவது, கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தனம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு இந்த முத்திரையைச் செய்ய பலன் கிடைக்கும்.

மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் வரும் முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்தும்.  சாந்தமான மனநிலை மற்றும் குணங்கள் பெற முடியும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.

பல்வலி, ஈறுகள் சார்ந்த வலி, வீக்கம் குறைய உதவும்.(பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம்).

காது வலி, தலைக்குள் ஏற்படும் வலி, மதமதப்பு ஆகியவை குறையும்.

Loading...
One Response
  1. May 29, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close