உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் weight loss tips in tamil

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி(தனியா) – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது
சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
கொத்தமல்லி தழை

செய்முறை :

* கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக நசுக்கி கொள்ளவும்.

* வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி (தனியா), சீரகம், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சத்தான கொள்ளு மிளகு ரசம் ரெடி.

* இந்த ரசத்தை அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரசத்தை அடிக்க வைத்து குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close