வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!!!

Loading...

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வெள்ளை முடி. இளமையிலேயே வெள்ளை முடி வருவதால் பலரும் ஹேர் கலரிங் சிறந்த வழி என்று செய்கிறார்கள். ஆனால் அப்படி வெள்ளை முடியை மறைக்க கலரிங் செய்து கொள்வதால், முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

மாறாக இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் எளிதில் வெள்ளை முடியை நீக்குவதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இங்கு வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் பொடியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

வெங்காய பேஸ்ட்

வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பது மட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

வெள்ளை முடி கருப்பாக, தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதனால் நிச்சயம் உங்கள் தலைமுடி கருமையாவதோடு, வேறுசில முடி பிரச்சனைகளும் நீங்கும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலமும் வெள்ளை முடியைத் தடுக்கலாம். மேலும் கேரட் ஜூஸ் முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும். ஆகவே உங்களுக்கு முடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸ் குடியுங்கள்.

எள் மற்றும் பாதாம் எண்ணெய்

எள்ளை அரைத்து பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, சில வாரங்கள் தொடர்ந்து தடவி வர, வெள்ளை முடியை கருமையாக்கலாம். மேலும் நிபுணர்களும் இம்முறையால் வெள்ளை முடி கருமையாவதாக கூறுகின்றனர். இம்முறையினால் நல்ல பலனைக் காண, எள்ளை நன்கு மென்மையாக அரைத்து, பாதாம் எண்ணெயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/hair-care/2016/five-best-home-remedies-for-white-hair-010602.html#slide62474

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close