கருத்தடைப் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!

Loading...

20ஆம் நூற்றாண்டில் தான் மனிதன் தனது அனைத்து வேலைகளிலும், துறைகளிலும் அதிக வேகம் செலுத்தத் தொடங்கினான். தனது செயல்திறனைக் குறைத்து அதிக பயன்பாடு பெற நினைத்தான். ஆனால், ஒன்றில் மட்டும் அதிக செயல்திறன் வெளிபடுத்தி, மிக குறைந்த பயன்பாடு பெற நினைத்தான். அதுதான், உடலுறவுக் கொள்ளுதல்.

தினம், தினம் சுகம் வேண்டும், இன்பத்தில் திளைக்க வேண்டும், ஆனால், குழந்தை மட்டும் வேண்டாம். இதற்காக மனிதன் கண்டுபிடித்தது தான் கருத்தடை முறைகள். மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை, ஆணுறை, பெண்ணுறைப் போன்றவை இதில் அடக்கமாகும்.

அதிவேகமான வாழ்வியல் முறையிலும் மனிதன் இழக்கக்கூடாது என்று நினைப்பது, ஜீவராசிகளின் அடிப்படை தேவை மற்றும் அவசியமாக கருத்தப்படும் உடலுறவு சமாச்சாரங்கள் தான். அதற்கு உபயோகமாக இருக்கும் கருத்தடைப் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவைப் பற்றி இனிப் பார்க்கலாம்…

கருத்தடையைப் அதிகம் பயன்படுத்துவோர்

நடுவயது பெண்களை விட (25-35), இளம் வயது பெண்கள் தான் அதிகமாக கருத்தடை மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்துகின்றனராம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது கலாச்சார மாற்றம் மற்றும் சீர்கேடு தான் என்று கருதப்படுகிறது.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை முறைகளில் அதிகமாக பயன்படுத்தும் முறையாக இருப்பது கருத்தடை மாத்திரைகள் தான் என்று கூறப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள் நல்ல பயன் தந்தாலும் கூட, இது பருவ வயது பெண்கள் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

கூச்ச சுபாவம்

இன்னும் நம் நாட்டில் ஆணுறை கேட்டு வாங்க கூச்சப்படுகின்றனர். இதனால் தான், கருத்தடை முறைகளில் மாத்திரைகள் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பால்வினை நோய்களை தவிர்க்க

பால்வினை நோய் தொற்றுகளை தவிர்க்க ஒரே வழியாக கருதப்படுவது, ஆணுறை மட்டும் தான். மற்ற கருத்தடை முறைகளைப் பயன்படுத்தினால் கூட, பால்வினை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.

குழந்தை வேண்டுவோர்

குழந்தை வேண்டும் என நினைப்பவர்கள், குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் நீங்கள் நினைப்பதை விட அதிக நாட்கள் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஐ.யூ.டி (IUD) பயன்பாடு

கடந்த சில ஆண்டுகளாக ஐ.யூ.டி களின் பயன்பாடு இரு மடங்காக அதிகரித்து வருவதாக அமெரிக்க ஆய்வகம் ஒன்று கூறியுள்ளது. ஐ.யூ.டி என்பது ஒருவகை கருத்தடை முறையாகும். இது, பெண்ணுறுப்பில் உட்சொருகப் படும் ஒரு கருவி. இதன் மூலமாக கருவுறுதலைத் தடுக்க முடியும்.

புரோஜெஸ்ட்டிரோன் ஊசி

கருத்தடை முறையில் பயன்பாட்டில் இருக்கும் மற்றுமொரு முறை, புரோஜெஸ்ட்டிரோன் ஊசி. இதை பெண்களின் புட்டத்தில் அல்லது கையில் வருடத்திற்கு நான்கு முறை உட்செலுத்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிப்பதை தடுக்க முடியும். ஆனால், இது எலும்பின் அடர்த்தி மற்றும் மாதவிடாய் காலங்களில் முறையற்ற இரத்தப் போக்கு பண்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close