உடல் பருமனால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுவதற்கானக் காரணங்கள்!!!

Loading...

உணவு முறை, உடல்நலக் குறைவுக் காரணங்களை விட, உடல் பருமனால் தான் நிறைய ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இது, தற்போதைய காலக்கட்டத்தில் பொதுவான பிரச்ச்னை போல உருமாறி நிற்கிறது.

முப்பது வயதை தாண்டியும் நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி எடுக்காவிடில் நிறையப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும், இல்லற வாழ்க்கையில் நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தை பேரு வேண்டி தவம் இருப்பவர்கள் கட்டாயம் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்….

மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அதிக உடல் எடை காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. அதிக உடல் எடை உங்களது சாதாரணமான ஹார்மோன் செயல்பாட்டை குறைப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிகிச்சைகள் பலனளிக்காமல் போகும்

மலட்டுத்தன்மையை சரி செய்ய மேற்கொள்ளும் சிகிச்சைகளையும் பயனற்று போக செய்கிறது உடல் பருமன்.

கருச்சிதைவுகள்

சில சமயங்களில் கருத்தரித்த பிறகும் கூட, கருவின் வலுவின்மையால் கருச்சிதை ஏற்படுகிறது. பெண்களின் அதிக உடல் எடையும் கருச்சிதைவுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது.

பல்பையுரு கருப்பை நோய்க்குறி (Polycystic Ovary Syndrome)

இந்த அதிக உடல் எடை பிரச்சனை பெண்களுக்கு பல்பையுரு கருப்பை நோய்க்குறி ஏற்பட காரணமாக இருக்கின்றது. மற்றும் கருமுட்டை சுழற்சியையும் உடல் பருமன் பாதிக்கிறது.

வாழ்க்கை முறை பாதிப்புகள்

உடல் பருமனால் ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை மட்டுமின்றி, நீரிழிவு, இரத்த சர்க்கரை, இரத்த கொழுப்பு போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து அதிகரிக்கிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close