வேகமாக உடல் எடை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை போக்கவும் இந்த ஜூஸ் குடிங்க!

உடல் பருமன் காரணத்தினால் நீரிழிவு, இதய நோய்கள் அபாயம், மூட்டு பிரச்சனைகள், தண்டுவடம் வலுவிழப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கின்றன நாம் யாரும் அறிந்தது தான்.

ஆனால், சமீபத்திய ஆய்வில், உடல் பருமனால் விந்தணுக்களில் இருக்கும் பல வகையான மரபணுக்களில் எதிர்மறை தாக்கங்களை உருவாகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைக்க வெறும் டயட் மட்டும் போதாது, பயிற்சியும் தேவை. குறைந்தளவு நடைப்பயிற்சியாவது பின்பற்ற வேண்டும். இது மட்டுமின்றி வேகமாக உடலில் உள்ள கொழுப்பு கரைய ஆப்பிள் இலவங்க பட்டை கலந்த நீரையும் பருகி வரலாம். இது உடலில் உள்ள நச்சுக்களையும் போக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, இந்த ஜூஸை எப்படி தயார் செய்வது, இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென என்று காண்போம்…

எளிமையானது

இந்த ஜூஸை நீங்கள் வெறும் சில நிமிடங்களில் தயாரித்து விடலாம். இது உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை போக்கவும் உதவுகிறது. மேலும் இது இயற்கையானது மற்றும் கலோரிகள் குறைவானது.

தேயவையான பொருட்கள்

சன்னமாக நறுக்கிய இரண்டு ஆப்பிள்கள் இரண்டு இலவங்க பட்டைகள் ஒரு லிட்டர் நீர்

செயல்முறை

முதலில் ஆப்பிளை கழுவி எடுத்துக் கொண்டு சன்னமாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை ஓர் பாட்டில் அல்லது ஜாரில் இலவங்க பட்டையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் நீர் ஊற்றி வைய்யுங்கள்.

ஆப்பிள் மற்றும் இலவங்க பட்டை ஊறவைத்த இந்த நீரை குடிப்பதற்கு முன்பு ஓரிரு மணிநேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

நீங்கள் ஃப்ரிட்ஜில் தயாரித்து வைத்திருக்கும் இந்த நீரை மூன்று நாட்கள் வரையிலும் கூட பயன்படுத்தலாம். மேலும், முதல் மூன்று நாட்களிலேயே நீங்கள் இதன் தாக்கத்தை உணர முடியும்.

ஆப்பிளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி மற்றும் பி போன்றவை நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயங்களை தவிர்க்க உதவுகிறது.

இலவங்க பட்டை கொலஸ்ட்ராலை குறைக்கவும், நீரிழிவை எதிர்த்து போராடவும் உதவுகிறது. மேலும், இது எலும்பு வலிகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

இந்த ஜூஸ் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பது மட்டுமின்றி. உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கி உடல் உறுப்புகளின் செயலாற்றைளையும் ஊக்குவிக்கின்றன.

உடல் பருமன் குறைந்து, நச்சுக்கள் போக்கி. உடல் சக்தி அதிகரித்து நாள் முழுதும் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க இந்த ஜூஸ் பயனளிக்கிறது.

Originally posted 2016-04-22 05:30:56. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *