புற்றுநோயின் நிவாரணத்திற்க்கு மாங்காய் இஞ்சி

பார்ப்பதற்கு இஞ்சியின் சாயலிலும், வாசனையில் மாங்காயின் மணத்தையும் கொண்டது மாங்காய் இஞ்சி. அதனால்தான் அதற்கு இப்படியொரு வித்தியாசமான பெயர்.மாங்காய் இஞ்சி, மஞ்சள் குடும்பத்தை சார்ந்தது. இது இந்தியாவில் குறிப்பாக குஜராத், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் விளைகிறது.

மாங்காய் இஞ்சி என ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது. அதைப் பலரும் வாழ்நாளில் சுவைத்திருக்கவும் மாட்டார்கள். இஞ்சியா என முகம் சுளிப்பவர்களும், இஞ்சி தின்ன குரங்கு பழமொழியை நினைத்துக் கொள்கிறவர்களும், தைரியமாக மாங்காய் இஞ்சியை சுவைக்கலாம். அதன் மணமும் சுவையும் யாருக்கும் பிடிக்கும்…” என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.

மாங்காய் இஞ்சியின் மருத்துவ மகத்துவங்களை விளக்கமாகச் சொல்கிற அவர், மாங்காய் இஞ்சியை வைத்து வித்தியாசமான 3 ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

மாங்காய் இஞ்சியில் கலோரி மிகக் குறைவு. இதில் நார்ச்சத்து மட்டும் அதிகமாக இருக்கிறது. முழுக்க முழுக்க மருந்தாக பயன்படுகிறது.

கலோரி 53 கிலோ கலோரிகள்
புரதம் 1.1 கிராம்
நார்ச்சத்து 1.3 கிராம்
கொழுப்பு 0.7 கிராம்
கால்சியம் 25 மி.கி.
இரும்புச் சத்து 2.6 மி.கி.

மஞ்சள், இஞ்சி போல் மாங்காய் இஞ்சியும் சிறந்த மருத்துவப் பயனைக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களை குணப்படுத்த இதை பயன்படுத்துகின்றனர். சரும நோய்களைக் குணப்படுத்தவும், இருமல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும், ஜுரம், விக்கல், காது வலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தில் மாங்காய் இஞ்சி பயன்படுகிறது.

Originally posted 2016-03-22 07:57:04. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *