நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் உணவுகள்!

புற்றுநோய் மிகவும் கொடியது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணமாக்கலாம். ஆனால் அது முற்றிய நிலையில் கண்டுபிடித்தால், இறப்பைத் தவிர வேறு வழியில்லை. சமீப காலமாக இளம் வயதினர் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்களுள் புகைப்பிடிக்காதவர்கள் தான் இந்த கொடிய நோயால் இறப்பை சந்திக்கின்றனர். ஆனால் பொதுவாக நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று கடினம். ஏனெனில் இது சாதாரண இருமலில் தான் ஆரம்பமாகும். நாம் இருமல் என்றால் டானிக் குடித்து விட்டுவிடுவோம்.

ஆனால் உங்களுக்கு பல மாதங்களாக வறட்டு இருமல் இருந்தால், அதை உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒருசில உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள். இங்கு அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்பிள்

ஆப்பிளை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

பூண்டு

பூண்டில் டயாலில் சல்பைடு என்னும் சேர்மம் உள்ளது. இது நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கும். ஆகவே அன்றாட உணவில் பூண்டுகளை அதிகம் சேர்த்து நுரையீரல் புற்றுநோயில் இருந்து விடுபடுங்கள்.

ப்ராக்கோலி

காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் உள்ள ப்ராக்கோலியில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்யும் பொருள் உள்ளது. ஆகவே இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயில் நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கும் பைட்டோ கெமிக்கல்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றம் லூடின் போன்ற நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அடிக்கடி இந்த பசலைக்கீரையை உணவில் சேர்த்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருங்கள்.

Originally posted 2016-02-09 02:29:18. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *