சத்து நிறைந்த கைக்குத்தல் அரிசி

முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந்தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. அரிசியில் நான்கு பகுதிகள் உண்டு. வெளிப்பகுதியான உமியை நீக்கிவிடுகிறோம்.

அடுத்த பகுதியான தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி (Brown rice)என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி (White rice) என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது.

இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களைப் பட்டியலிட்டால், கைக்குத்தல் அரிசியின் சிறப்பு புரியும்.ஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்… நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, வைட்டமின் சத்துக்கள் போன்றவையெல்லாம் அதிகமாகவும், கொழுப்பு போன்றவை குறைவாகவும் இருக்க வேண்டும்.

அதுதான் உடலுக்கு நல்லது. இங்கே இரண்டு அரிசியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்… வெள்ளை அரிசியைவிட, பழுப்பு அரிசி பல மடங்கு உயர்ந்தது என்பது புரியும்! பழுப்பு நிற அரிசியை வெண்மையாக்க முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள்.

இப்போது 12% தீட்டப்படுகிறது. விளைவு – இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக்கிறது. இதன் மற்றொரு விளைவு – ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது – பச்சரிசியா… புழுங்கல் அரிசியா என்பது. பச்சரிசி என்பது பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசி. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, அதன்பின் தீட்டுவது.

இப்படி அவிக்கும்போது, தவிட்டுப் பகுதியில் உள்ள பல சத்துக்கள் சற்று உருகி, உள்ளே உள்ள மாவுப்பகுதியில் கலந்து விடுகின்றன. ஆகவே, தீட்டப்பட்ட பிறகுகூட, பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியில் நிறைய சத்துக்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதே உண்மை.

ஊட்டப்பொருட்களையும் இழந்து, நச்சுத் தன்மையை அடைந்துவிட்ட ஆலை அரிசியை நாம் ஏன் உண்ண வேண்டும்? கைக்குத்தல் அரிசிக்கு மாறலாமே? இல்லை, ஆலை அரிசி தான் விதி என்றால்கூட, குறைந்தபட்சம் புழுங்கல் அரிசிக்கு ஏன் மாறக்கூடாது?

Originally posted 2014-10-29 19:46:33. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *