வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

மேற்கத்திய கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் என நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் ஆண்கள் வயது மூத்த பெண்களை விரும்புவது, திருமணம் செய்துக் கொள்ள நினைப்பது போன்றவற்றுக்கு காரணமாக இருக்கிறது…..

உடல் ரீதியாகவும் சரி, மனம் ரீதியாகவும் சரி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் முதிர்ச்சியான பெண்களிடம் மனம் திறந்து பேச முடியும். பதின் வயதுகளில் இருந்து இருபதுகளின் ஆரம்பத்தின் வரை ஆண்களுக்கு அவர்களை விட வயது மூத்த பெண்கள் மீது ஆசை அல்லது மோகம் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது இந்த அழகு தான். ஆனால், முதிர்ச்சி ஏற்படும் போது இந்த ஆசை ஆண்கள் மத்தியில் குறைய ஆரம்பித்து விடுகிறது.

எந்த ஒரு செயல் மற்றும் விஷயங்களையும் முதிர்ச்சியான பார்வையோடு பார்க்கும் திறன் அவர்களுக்கு இருக்கிறது என்ற எண்ணம். இன்றைய ஓட்டப்பந்தய வாழ்க்கை முறையில், மனைவி எதற்கெடுத்தாலும் தன்னிடம் வந்து கேள்விக் கேட்டுக் கொண்டு நிற்க கூடாது என்ற ஆண்களின் எண்ணம் இதற்கான மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுப்பிடிப்பது, ஏதேனும் கூறினால் அதிலிருந்து வேறொரு விஷயத்திற்கு அந்த பேச்சை மாற்றி எடுத்துக் கொண்டு போவது என நச்சரிப்புகள் இல்லாமல், தெளிவான பேச்சு, எதையும் புரிந்துக்கொள்ளும் மனோபாவம் வயது அதிகமான பெண்ணிடம் இருக்கிறது என்று ஆண்கள் கருதுகிறார்கள்.

பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இதிலும், முதிர்ச்சியான பெண்ணிடம் புரிதலோடு கலந்த அக்கறை இருப்பது, தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சி அடையவும் செய்கிறது என்று ஆண்கள் கருதுகிறார்கள்.

தவறுகள் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ அனைவரும் தவறுகள் செய்வதுண்டு. இதை முதிர்ச்சியுடைய பெண்கள் ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் கொண்டிருப்பார்கள். நீயா, நானா என்ற எண்ணம் பெரிதாய் இருக்காது என்ற கருத்தும் கூட ஆண்கள் தன்னை விட வயது அதிகமான பெண் மீது ஆண்களுக்கு மோகம் ஏற்பட ஓர் காரணமாக இருக்கிறது.

Originally posted 2015-12-18 19:45:40. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *