ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுருள்பாசி

சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி சுபைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும்.

இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும். உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இதில் முதல் நிலையில் இருப்பது சுபைருலினா எனப்படும் இந்த சுருள்பாசியே.

இந்த சுருள்பாசியை கேப்சூல்(மாத்திரை) வடிவில் வந்ததுள்ளது. இந்த சுருள்பாசி குப்பிகளை குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 என்றும், பெரியவர்கள் 4 என்ற அளவிலும் உட்கொள்ள வேண்டும். இதை காலை, மாலையில் உணவுக்கு முன் அருந்துவது நல்லது. இந்த சுருள் பாசியில் மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ,டி,இ,கே, அமினோ ஆசிட், காமோலினா லிங்க் அமிலம், புரதம் (55% முதல் 65% வரை), மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டா கரோட்டின் , வைட்டமின் பி6, பி12, இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், சூப்பர் ஆக்ஸைடு, டிஸ்மியூட்டேஸ் (SOD) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.

உடலைச் சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அதிக சத்துள்ள உணவுப்பொருள் சுருள்பாசி மட்டுமே. பசும்பாலை விட 4 மடங்கு சத்து நிறைந்தது. தாது உப்புக்களாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. கை, கால், மூட்டுவலியை முற்றிலும் நீக்குகிறது.

வைட்டமின் ஏ, கண் பார்வையை சீராக இருக்கச் செய்கிறது. இதிலுள்ள ‘பி’ வைட்டமின்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையம் சீராக செயல்பட்டு தேவையான அளவு இன்சுலின் சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. தோல் சுருக்கங்களை நீக்கி இளமையைத் தருகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்க வல்லது. வெண் தேமலை படிப்படியாக குறைக்கிறது.

Originally posted 2015-11-21 09:23:12. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *