பவுத்ரம் என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?

மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஆனல் கிளான்ட்‘ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன.

அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின்சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘பைப்‘ போன்று உருவாகிவிடும். மலம் கழிக்கும்போது அந்த ‘பைப்‘க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும்.

அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *