மாதவிடாய் பிரச்சனையை சீராக்கும் உணவுகள்

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது  மாதவிடாய் பிரச்சனை. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும், தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம்.

• இந்த காய்கறியை மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறாத பொழுது சாப்பிட்டு வந்தால், சரியான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம்.

• சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

• தினமும் உணவை சாப்பிடும் போது, அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

• பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

• சீரான மாதவிடாய் சுழற்சியை பெற எள்ளை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

• சோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

• தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *