எடை இழப்பிற்கான‌ ஆயுர்வேத மருந்துகள்

ஆயுர்வேத முறையில் எடையை இழப்பது பல பேருடைய விருப்பங்களாக இங்கே உள்ளது. இங்கே நம் எல்லோருக்கும் தெரியும் நம் உடலிற்கு தேவையான பொதுவாக உள்ள மருந்து வகை எதுவென்று. ஒவ்வொருவருடைய உடல் அமைப்பையும், அதற்கு ஏற்ற மருந்துகளையும் நாம் வீட்டிலேயே கண்டுபிடிக்க முடியும் என்பது கண்டிப்பாக முடியாத ஒன்று. எனவே நம் அனைவருக்கும் ஏற்ற மருந்துகள் எது என்பதை இங்கே பார்ப்போம்.
1. எலுமிச்சை & தேன்:
மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் தீர்வாக இருப்பது தேன் மற்றும் எலுமிச்சையாகும். ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் பல் துலக்க்கிய பின் முதல் விஷயமாக சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருக வேண்டும். இது ஒரு சுவையான பானம் ஆகும்! இதில் ஆற்றல்மிக்க உடல் எடை இழப்பு காரணிகள் இருப்பதால் பசியின்மை குறைத்து உங்கள் சுகாதாரத்திற்கும் எந்த வித‌ பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பலர் எலுமிச்சை சாறு அருந்ததினால் சீக்கிரமாக சளி பிடிக்கும் என்று அஞ்சுகின்றனர். இந்த பயத்தை தவிர்க்க நீங்கள் சூடான நீரை பயன்படுத்தி குடிப்பதால் நல்ல பலனை பெறலாம்.


2. மிளகு:
எலுமிச்சை மற்றும் தேன் தந்திரம் செய்யும் போது, மிளகு தூள் இதனுடன் சேர்த்து பயன்படுத்தும் போது மேலும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக செயல்படுகிறது. இதை காலையில்தான் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை, உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது அருந்தலாம். பலர் எலுமிச்சை சாறு அருந்ததினால் சீக்கிரமாக சளி பிடிக்கும் என்று அஞ்சுகின்றனர். இந்த பயத்தை இதில் உள்ள மிளகு தவிர்த்து விடும்.
3. முட்டைக்கோஸ்:

முட்டைக்கோஸை சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிடுவது மிகவும்  நல்லது. தினமும் ஒரு கப் முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவதால் அதிக ஆற்றல் தருவதோடு, கொழுப்பையும் அதிக அளவில் எரிக்கிறது. எனவெ இதை ஒரு கப் தினமும் உணவு சாப்பிடும் முன் அல்லது சிற்றுண்டிகளுக்கு பதிலாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

 

4. செரிமானத்திர்கான காரணிகள்:
உடல் எடை பெரும்பாலும் அதிகரிப்பதற்கான காரணம் முறையற்ற செரிமானம்தான், அல்லது இதற்கு ஆயுர்வேத செரிமானம் சரியான‌ காரணமாக இருக்கிறது. செரிமான எடை இழப்பு அதிசயங்களை சில உணவுகள் உங்கள் உடல் செரிமானத்தை அதிகரிக்க இஞ்சி, பப்பாளி, பாகற்காய், பூண்டு, மிளகாய் போன்ற‌ உணவுகள் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் முறையற்ற செரிமானத்தை தவிர்த்து, ஆயுர்வேத முறையில் ஒரு நல்ல செரிமானத்தை இந்த பொருட்கள் தருகின்றன.
5. அதிகம் மசாலாவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்:
மசாலா இல்லாத செரிமானம் எனபது குறைவாகவே இருக்கும். காரமான, கசப்பான போன்ற உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலில் செரிமானமானது நன்கு நடைபெறுகிறது. சீரகம், சிவப்பு மிளகாய், கடுகு மற்றும் மிளகு போன்றவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் இவை அனைத்தும் செரிமானத்தை நன்கு தூண்ட உதவி புரிகின்றன. நீங்கள் உங்கள் சமையலில் மிளகாய், மிளகு இந்த இரண்டையும் அல்லது மிளகை மட்டுமாவது அதிகம் சேர்த்து கொள்ளலாம். மிளகானது அமிலத்தன்மையை குறைத்து மிளகாய் போல் இல்லாமல் நம் உடலை குளிர்விக்க உதவுகின்றன.
6. அமா பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்:
அமா என்பது ஆயுர்வேதத்தில் முழுமையற்ற செரிமானத்தினை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும். நம் உடலில் வியர்வையினால் ஏற்படும் துளை அடைப்பிற்கும், எடை கூடுவதற்கும், அதிக செரிமானமின்மைக்கும் காரணமாக சில காரணிகள் உள்ளன. இதை விட்டொழிப்பதோடு, நம் உடல் எடையை சமாளிப்பதும் கடினமாக உள்ளது. எனவே, இதை குறைக்க உதவி செய்யும் பொருட்களாக நாம் உட்கொள்ளும் உணவுகளான‌ மஞ்சள், திரிபலா (நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய் சம விகிதத்தில் கலந்த‌ கலவை), திரிகாது (இஞ்சி, இந்திய நீண்ட மிளகு, இஞ்சி சம விகிதத்தில் கலந்த கலவை), பார்பெரி மற்றும் குக்குலு போன்ற இவைகளை உட்கொள்வதால் அமா – வை தவிர்க்கலாம்.இவற்றை நீங்கள் மாத்திரை வடிவிலும் பயன்படுத்தலாம் அல்லது பவுடர் வடிவிலும் இதை நீங்கள் பயன்படுத்தலாம்..

One Response
  1. March 31, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *