நோய்களை குறைக்கும் நிம்மதியான உறக்கம்

Loading...

நாம் தினமும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக செயல்பட தூக்கம் மிகவும் அவசியம்.தினமும் குறைந்தது 7-8 மணிநேரமாவது தூங்கினால் மட்டுமே உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும்.

சரியான அளவில் தூங்காவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, மன அழுத்தத்தை உண்டாக்கும்.

ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, அதுவே உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.

ஆழ்ந்த உறக்கத்தில் நம் மூளை அன்று நடந்த விஷயங்கள், உணர்ச்சிகள், ஒருசில நினைவுகள் போன்றவற்றை சேகரித்து வைக்கும் பணியில் ஈடுபடும். இப்படி செய்வதால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

தினமும் 7 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்கள், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது, எனவே நன்றாக தூங்கினால் உடல் பருமன் பிரச்னைக்கு குட்பை சொல்லலாம்.

நிம்மதியாக தூங்கினால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைப்பதுடன், மனமும் சற்று ரிலாக்சாக இருக்கும், இதனால் நாம் ஆரோக்கியமாக இருப்பதுடன் முகமும் பொலிவுடன் இருக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *