ஹெல்த் அண்ட் பியூட்டி

Loading...

தமன்னா ஃபிட்னெஸ்

‘கேடி’ படத்தின் மூலம் 2005ல் தமிழ் சினிமாவுக்கு வந்த தமன்னா, ‘தேவி’ ரிலீஸ் நேரத்திலும் கிட்டத்தட்ட அதே லுக்கிலேயே இருப்பது மகா மெகா ஆச்சரியம். டென்ஷன், பார்ட்டி கலாசாரம், ஈகோ என ஹெல்த்தைப் பாதிக்க சினிமாவில் ஆயிரம் காரணங்கள்.

அத்தனையையும் தாண்டி தமன்னா ஃபிட்டாக இருக்கும் ரகசியம் என்ன ?

*சைவ உணவுகளையே விரும்பக்கூடியவர். பொரித்த, கார உணவுகளைக் கண்டால் அலறியடித்து ஓடிவிடுவார். சர்க்கரை கலந்த உணவுகளுக்கு கட்டாயம் ‘நோ’.
*தயிருக்கு தமன்னா மிகப் பெரிய விசிறி.
தமன்னாவின் டயட்டில் தினமும் தயிர் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.
*ஷூட்டிங் சமயங்களில் நாட்கணக்காக வெயிலிலும், ஸ்டூடியோ லைட்டிங்கிலும் நடிக்கும்போது உடலில் ஏற்படும் உஷ்ணத்தை சரிக்கட்ட குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார்.
*உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் தவறாமல் ஜிம்முக்குச் சென்றுவிடுவார்.
*சருமத்தின் மினுமினுப்பு குறையாமல் இருப்பதன் ரகசியம் கொஞ்சம் வெஜிடபிள் சூப், கொஞ்சம் ஜூஸ், நிறைய தண்ணீர்.
*உடற்பயிற்சிகள் ஒருமணி நேரம் செய்தாலும் யோகாசனப் பயிற்சிகளையும் மிஸ் பண்ணுவது இல்லை. ‘மனதை சமநிலையோடு வைத்துக் கொள்ள யோகா ஒவ்வொருவருக்கும் தேவை’ என்பது தமன்னா மொழி.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *