கூந்தலுக்கு கண்டிஷனரை எப்படி பயன்படுத்த வேண்டும்

Loading...

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும் கண்டிஷனர் போட வேண்டும். ஆனால் அதை ஏன் போடவேண்டும் எப்படி போட வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கூந்தலுக்கு கண்டிஷனரை எப்படி பயன்படுத்த வேண்டும்
தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும் கண்டிஷனர் போட வேண்டும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதை ஏன் போடவேண்டும் எப்படி போட வேண்டும் என தெரிவதில்லை.

கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும் அதனை தவறாக உபயோகப்படுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதனை உபயோகப்படுத்தும்போது நீங்கள் செய்யும் தவறுகள் பற்றி காண்போம்.

உங்கள் ஸ்கால்ப்பில் உயிரோட்டம் இருப்பதால் அங்கே கண்டிஷனர் தேவையில்லை. இயற்கை எண்ணெய் சுரப்பதால் வேர்கால்களை நமது சருமம் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் அங்கே கண்டிஷனர் போடும்போது கூந்தல் பலமிழந்து, உதிர்தல் உண்டாகிறது.

மிகக் குறைந்த அளவே கண்டிஷனர் போதுமானது. ஆனால் அதிகமாக உபயோகப்படுத்தும்போது உங்கல் முடியை நீங்கள் இழக்க வேண்டியது வரும்.

உங்களுக்கு கூந்தல் நல்ல நிலையில் இருந்தாலும், ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஷாம்பு உங்கள் கூந்தலில் அதிக வறட்சியை கொடுத்து பலமிழக்கச் செய்யும். ஆகவே ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகித்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்.

உங்கள் கூந்தலுக்கு கட்டாயம் ஆழ்ந்த கண்டிஷனர் தரப்பட வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி, முடி உடைதல் ஆகியவற்றை தவிர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆலிவ் என்ணெய், முட்டை ஆகியவை கலந்து செய்த கண்டிஷனர் உங்கள் கூந்தலுக்கு வலுவூட்டும்.

கூந்தலின் நுனிக்கு கண்டிஷனர் அதிகம் தேவை. ஷாம்புக்களில் இருக்கும் கண்டிஷனர் பயன் தராது.

கண்டிஷனர் பயன்படுத்தி அதிக நேரம் அப்படியே விடக் கூடாது. அதிகபட்சம் 2 நிமிடங்கள் இருந்தால் போதுமானது என்று கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நாம் அனைவரும் ஷாம்பு பயன்படுத்தி பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் கண்டிஷனர் பயன்படுத்தி சில நிமிடங்களில் தலையை அலசி அதன்பின் ஷாம்புவை போடவேண்டும்.. அதாவது கண்டிஷனரை கழுவத்தான் ஷாம்புவை பயன்படுத்த வெண்டும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *