தர்பூசணிப் பழம்

கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும்கூறப்படும். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்டதர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இவைகள் சிவந்த நிறத்தில்மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும்இதை உண்ணலாம். சில இனிப்பாகயிருக்கும். சில ருசியே இல்லாமல் சப்பென்றும் இருக்கும். இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும்உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ்போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி.ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதைஅமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்குபிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்றுவலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியதுதர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்டசத்து மிகுந்த பானம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *