ப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்?

Loading...

உள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலர் தங்கள் உள்ளாடை எப்படி இருந்தாலும் பரவாயில்லை யார் பார்க்கப் போகிறார்கள் என நினைத்து தவறான உள்ளாடைகளை அணிகின்றனர்.

இதுபோன்ற தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச்செல்கின்றது. இதை தவிர்ப்பது எப்படி என நாங்கள் இப்போது உங்களுகுக் விளக்கப்போகிறோம்.

சரியான ப்ராக்களை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் உங்கள் உடம்பில் கடும் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

ஆனால் இது போன்ற தழும்புகள் ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது, அதை எப்படி சிகிச்சை அளித்து ஆறவைப்பது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

ஸ்ட்ராப்பை தளர்த்தவும் :
இறுக்கமான ஸ்ட்ராப்களை சற்று தளர்த்தி அது உங்கள் உடம்பில் பள்ளங்களை ஏற்படுத்தி தழும்பை உருவாக்காமல் இருக்குமாறு செய்யுங்கள். தழும்புகளைத் தவிர்க்க இது சிறந்த மற்றும் முதலில் செய்யக்கூடிய வழிமுறை.

2. பெட்ரோலியம் ஜெல்லி: ப்ராவின் எலாஸ்டிக் எங்கெல்லாம் அழுத்தம் தருகிறதோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுங்கள். இது உங்கள் உடம்பில் அழுத்தம் உள்ள இடங்கள் ஈரப்பதத்துடன் இருக்கவும் அங்கு சருமம் பாதிக்கப் படாமலிருக்கவும் உதவும்.

3. மார்பகக் கீழ்பகுதியை சுத்தம் செய்யுங்கள்: இந்த பகுதியில் உராய்வினாலும் அசைவினாலும் ஏற்படும் கருமையாகவோ அல்லது சிவந்தோ போய்விட வாய்ப்புண்டு.

அப்படியானால் அங்கு இறந்த சரும செல்களில் சேர்க்கை அதிகமாக இருக்கும். அதனால் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தவேண்டும்.

ஈரப்பதம்: மேற்கூறியவாறு இறந்த செல்களை அகற்றியபிறகு, அங்கு ஈரப்பதத்தை தக்கவைக்க தேவையான மாயிஸ்சரைசர் அல்லது ஈரப்பதம் தரும் ஏதாவது ஒன்றை தடவவேண்டும். இது உராய்வைக் குறைக்கும்.

5. சோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழை குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால் நாள் முழுவதும் ப்ரா அணிந்துவிட்டு சோர்வடையும்போது இதமாக இருக்கும்.

இந்த ஆலோவெரா ஜெல்லை சிறிது தடவினால் அது தழும்பு மற்று உராய்வினால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும்.

6. ஐஸ் பேக்: மிகவும் அழுத்தமான ப்ராவை அணிந்தபிறகு ஏற்படும் அசவுகரியம் மற்றும் வலிக்கு இந்த ஐஸ் பேக் ஒத்தடம் ஒரு இதமான சக்திய்வாய்ந்த வலி நிவாரணி. இதனால் ப்ராவில் உள்ள ஸ்ட்ராப் தழும்புகளைத் தவிர்க்க இது மிகவும் உதவும்.

7. மஞ்சள்: மஞ்சளை அரைத்து ப்ரா எலாஸ்டிக் அழுத்தத்தினால் நிறம் மாறிய இடங்களில் தடவுங்கள். இது நிறம் மாறிய சருமத்தை வெண்மையாக்கவும் தழும்புகளை படிப்படியாக குணமாக்கி ஆறுதல் அளிக்கவும் செய்யும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close