விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!!!

Loading...

நமது கிராமங்களில் முன்னர் பரவலாக ஓர் சொல்வழக்கு புழக்கத்தில் இருந்து வந்தது, "இவ திமிரு எல்லாம் புருஷன்கிட்ட தான் அடங்கும்..". அதாவது பருவ வயதில் கொஞ்சம் துடுக்காக இருக்கும் பெண்களை பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்ததுண்டு. ஒரு வேலை அந்த சொல்வழக்குக்கு இது தான் அர்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் இப்போது பிறந்துள்ளது.

சமீபத்தில், மருத்துவ ஆராய்ச்சியில், பெண்கள் தங்கள் கணவனோடு உடலுறவில் ஈடுபட்டு, அவனது விந்தணு அவளது உடலோடு கலந்த பின்னர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், அவர்களது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்…

விந்தணுவின் தாக்கம்
ஆணின் விந்தணு பெண்களின் மரபணுக்களில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, அவர்களுள் உடலளவிலும், மனதளவிலும் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட ஒரு வகையான காரணமாக இருக்கிறது.

மன சோர்வையும் சரி செய்யும் இதற்கு முன்னர், உடலுறவில் ஈடுபட்டு விந்தணு பெண்களுக்குள் செல்லும் போது, பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு போன்றவை குறைவதாக ஓர் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். பொதுவாகவே, உடலுறவில் ஈடுபடுவதால் ஆண், பெண் இருபாலர்களுக்கும் மன அழுத்தம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊர் பழமொழி
எலியும், பூனையுமாக திரியும் தம்பதிகளை கண்டால் நம்ம ஒரு பெரியவர்கள் எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்றும் உங்க ரெண்டு பேருக்குள்ளையும் "அந்த" விஷயம் நடந்துச்சா இல்லையா? அப்பறம் ஏன் இப்படி கீரியும் பாம்பா இருக்கீங்க என்றெல்லாம் நொண்டி குடைந்து, பின்னி பெடல் எடுப்பார்கள். இதெல்லாம் கூட இவர்கள் இப்போது கண்டுபிடித்ததற்கான சான்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

விந்தணுவில் இருக்கும் புரதம் ஆணின் விந்தணுவில் புரதம் இருக்கிறது என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாத ஒன்று. இந்த புரதத்தை மாஸ்டர் ரெகுலேட்டர் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த விந்தணுவில் இருக்கும் புரதமானது பெண்களின் மரபணுக்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாம்.

புரதத்தின் செயல்பாடு இந்த புரதம், பெண்களின் என்சைம், ஹார்மோன்கள் மற்றும் ஏற்பிகளை தனது செயல்பாடுகளால் கட்டுப்படுத்துகிறதாம்.

உடல் மற்றும் மன ரீதியான மாற்றம் இந்த விந்தணு புரதம் தான் பெண்களின் உடல் மற்றும் மன ரீதியான நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றம் ஏற்பட செய்கிறதாம்.

முந்தைய ஆராய்ச்சிகள் இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் ஆண்களின் விந்தணு மனநிலை மேலோங்கவும், ஈர்ப்பை அதிகரிக்கவும், நல்ல தூக்கத்தை தூண்டவும் முக்கிய பங்குவகிப்பதாக கூறப்பட்டது. மற்றும் வேறொரு ஆராய்ச்சியில் விந்தணு கலப்பு ஏற்படும் போது பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் ஒருவகையான அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.

விந்தின் வேலை விந்து வெறும் விந்தணுவை மட்டுமே ஏந்தி செல்வது அல்ல, இது பெண்களின் அண்டவிடுப்பிலும் (ovulation) முக்கிய பங்குவகிப்பதாக கூறுகிறார்கள்.

பெண்களின் மூளையில் சிக்னலாக பணிபுரிகிறது பாலியல் திரவம், பெண்களின் மூளையில் ஓர் ஹார்மோன் சிக்னலாக பணிபுரிகிறது, இது கரு வெளிப்பட தூண்டும் மற்ற ஹார்மோன்களை தூண்டுகிறது.

நியூயார்க் பல்கலைகழகம்
நியூயார்க் பல்கலைகழகம் 293 பெண்களை வைத்து நடத்திய ஓர் ஆய்வில், ஆணுறையின்றி உடலுறவில் பெண்களுக்கு தான் பெரும்பாலும் மன அழுத்தம் குறைகிறது என்று கூறப்படுகிறது.

விந்தணுவின் அளவு
விந்தணு பெண்ணுறுப்பில் எவ்வளவு அதிகம் உட்செல்கிறதோ அவ்வளவு அதிகம் பெண்கள் இன்பம் அடைகின்றனர் என்றும் இந்த ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close