அழகிய கண்களை பெறுவது எப்படி ?

Loading...

உங்களுக்கு வயதான தோற்றத்தை முதலில் காண்பிப்பது கண்கள்தான். கண்களை சுற்றிலும் மிக மென்மையான சருமம் உள்ளது. ஆகவேதான் எளிதில் சுருங்கிவிடுகின்றன. வயதாகும்போது, புதிய செல்களின் வளர்ச்சி குறைந்து இறந்த செல்களின் தேக்கம் அதிகமாக காணப்படும்.

போதிய அளவு ரத்த ஓட்டமும் இல்லாதபோது, கருவளையம், சுருக்கம் ஆகியவை ஏற்படும். எளிதில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவோம். உங்கள் கண்களை அழகாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள விருப்பமா? இங்கே சொல்லப்பட்டிருக்கிற குறிப்புகளை பயன்படுத்துங்கள். நிச்சயம் அழகான கண்களை பெருவீர்கள்.

உங்கள் கண்களை அழகுபடுத்துவதற்கு முன் சில விஷயங்களை மறக்காமல் செய்துவிடுங்கள். நீர் அதிகம் குடிக்க வேண்டும். இவை இறந்த செல்களை தேங்க விடாமல் காத்துக் கொள்ளும். மற்றொன்று போதிய அளவு தூக்கம் தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம்.

கண்களுக்கான கிளென்ஸர் : சருமத்தை போலவே, கண்களிலும் நச்சுக்களும் தூசுகளும் தேங்கியிருக்கும். அவற்றை தினமும் நீக்கினால் உங்கள் கண்கள் அழகாக தெரியும். தினமும் வெதுவெதுப்பான சுத்தமான நீரில் கண்களை சில நொடிகள் அமிழ்த்தி, நீருக்குள் இமைகளை திறந்து மூடுங்கள். அன்று முழுவதும் உங்கள் கண்கள் பளபளப்பாய் சிமிட்டும்.

கண்களுக்கு பயிற்சி : தினமும் காலை அல்லது இரவில் வெறும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். இவை உங்கள் கண்களை இளமையாக பாதுகாக்க அவசியம் தேவைப்படும் பயிற்சிகள் ஆகும்.

1. கண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கி, அதே அளவு விரியுங்கள். இதனால் ரத்த நாளங்கள் கண்களுக்கு அடியில் விரிந்து, ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும்.

2. கண்களை வட்ட வடிவில் இடமிருந்து வலமாக, பின் வலமிருந்து இடமாக மூன்று முறை சுழற்றுங்கள். பிறகு மேலும் கீழும் அசைக்க வேண்டும்.

இந்த பயிற்சிகளை தினமும் செய்வது உங்கள் பார்வைத் திறனையும் அதிகப்படுத்தும்.

கண்களுக்கு மசாஜ் : முகத்தில் மற்ற இடங்களை தொடுவது போல், அழுத்தமாக கண்களை தொடக் கூடாது. கூடிய மட்டிலும் கைகளை கண்களின் அருகில் எடுத்துச் செல்லாதீர்கள். வாரம் மூன்றுமுறை இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை சிறிது எடுத்து, சுண்டு விரலால் கண்களைச் சுற்றிலும் மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

ரோஸ் வாட்டரை பஞ்சினால் நனைத்து, கங்களின் மேல் அப்படியே வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து எடுக்கலாம். வெள்ளரிக்காய், தக்காளி அல்லது உருளைக் கிழங்கையும் வட்ட வடிவில் துண்டாக்கி கண்கலின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

அதிக நேரம் கணிப்பொறி பார்ப்பதாலோ அல்லது படிப்பதாலோ கண்கள் களைப்பாக இருக்கும். அந்த சமயங்களில் , தேயிலையை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரை பஞ்சினால் கண்கள் மீது வையுங்கள். மிகக் குளிர்ச்சியாகவும் புத்துணர்வோடும் இருக்கும். கண்களில் புது அழகு மிளிர்வதை அப்போதே உணர்வீர்கள்.

கண்மை வைப்பதால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். தூசுக்களிலிருந்து கண்ணை காப்பாற்றும். டிலேயே கண்மை செய்து இட்டுக் கொள்வது நல்லது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close