பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்

Loading...

பெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான்.

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்
கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். இவை உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சினையை உண்டாக்குகின்றன.

ஒருசில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் எளிதில் கர்ப்பமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ, ஈ, டி, ஒமேகா 3, பேட்டி ஆசிட் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த உணவை ஆண், பெண் இருவருமே சாப்பிடவேண்டும். ஏனென்றால் இதில் உள்ள முட்டை மற்றும் காளானில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் ஜிங்க், வைட்டமின் டி இருப்பதால் இது பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்திற்கு தேவையான வலுவையும் வீரியத்தையும் தருவதால் விரைவில் கர்ப்பம் உருவாகலாம்.

காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். கருத்தரிப்பதை அதிகரிக்கும் உணவில் மிக முதன்மையானது, சால்மன் மீன்கள். இந்த மீன்களை கழுவி, அதில் இஞ்சியை துருவிப்போட்டு, வினிகர், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊறவைத்து, கிரில் செய்து சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

சீஸ் உணவில் பெண்கள் கருத்தரிக்க தேவையான கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது. கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால் ஆண்கள் இதை அதிகம் சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு காம உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகப்படுத்தும் மற்றொரு இயற்கை உணவாக சிப்பி உள்ளது. அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் எண்ணெய், மிளகாய்த் தூள், பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் கிரில் செய்து சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்தவரை ஆண்களைவிட பலம் குறைந்தவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்களுடைய உடலை பலமாகவும் திறனாகவும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. கர்ப்பமாவதில் பிரச்சினை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்லி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மாலையில் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close