ஆணுறுப்பின் அழகை பற்றிய பெண்களின் எண்ணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா??

Loading...

ஆண்களை பொறுத்தவரை உடலளவில் பெரும் துயர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது பெரும்பாலும் அவர்களது ஆணுறுப்பு சார்ந்த பிரச்சனையாக தான் இருக்கும். ஆங்கிலத்தில் பிரபலமான பழமொழி ஒன்று இருக்கிறது "Size doesn’t matter" அதாவது அளவு ஓர் பிரச்சனையில்லை என்பது தான் இதன் பொருள்.

இது, "அந்த"ரங்க விஷயத்திற்கும் பொருந்தும் என ஆண்களில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. நான்கு அங்குலம் வரையிலான அளவே பெண்களோடு உறவுக்கொள்ள போதுமானது என மருத்துவர் கூறினும் கூட, இது சில சமயங்களில் கௌரவ பிரச்சனையாக ஆகிவிடுகிறது. இதில் சிலருக்கு இறுக்கமான உள்ளாடை அணிவதால் அவ்விடங்களில் அலர்ஜிகள் ஏற்பட்டுவிடும்.

இதனால் எங்கு அழகாய் இல்லை என்று ஒதுக்க / வெறுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கையில்… ஆணுறுப்பின் அழகை பற்றி பெண்கள் என்ன நினைக்கின்றனர் என்று உங்களுக்கு

இதுக்கும் ஓர் ஆய்வு ஆணுறுப்பின் அழகு என்ன என்று பாலியல் மருத்துவ பத்திரிகையில் ஓர் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வில் நூற்றுக்கும் மேலான பெண்கள் பங்கெடுத்து அவர்களை பொறுத்தவரை ஆணுறுப்பின் அழகென்றால் என்ன என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்குபெற்ற பெண்கள் இந்த ஆய்வில் அனைத்து வயது பெண்களும் பங்கெடுத்துள்ளனர். 16-20, 25, 30, 40 மற்றும் 50 வயதான பெண்கள் என 105 பெண்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்து ஆணுறுப்பின் அழகு என்ன என்ற தனியாக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளுக்கு பதிலளித்துள்ளனர்.

ஆண்குறி துளைப் பிறழ்வு பாதிப்பு ஆய்வில் பங்கெடுத்த பெண்களிடம் ஆண்குறி துளைப் பிறழ்வு சார்ந்த பாதித்த ஆண்களின் பத்திற்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. ஆண்குறி துளைப் பிறழ்வு பாதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Hypospadias-affected surgically repaired genitals – HASRGs) என்று கூறுகிறார்கள்.

பெண்களின் கருத்து இந்த ஆய்வில் பங்கெடுத்த பெண்கள், ஆணுறுப்பின் சிறுநீர்க்குழாய் திறப்பு பகுதியின் தோற்றம் மிக முக்கியமானது என்றும். அதுதான் அழகென்றும் கூறியிருக்கிறார்கள்.

வளைந்து காணப்படும் ஆணுறுப்பு சில ஆண்களுக்கு விறைப்பு ஏற்படும் போது, ஆண்குறி வளைந்து காணப்படும். இது மிகவும் இயல்பான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆயினும் மிகவும் வளைந்து காணப்பட்டால் அது "Peyronie" எனப்படும் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அளவு ஒரு பிரச்சனை இல்லை நாம் முன்பு கூறிய ஆங்கில பழமொழியான "Size Doesn’t matters" என்பதை தான் பெண்கள் கூறியிருக்கிறார்கள். மற்றும் பெரும்பாலான பெண்கள் ஆண்கள் அவர்களது ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

டாக்டர். நோர்மா ருப்பேன் இந்த ஆய்வை நடத்திய சுவிட்சர்லாந்து பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர். நோர்மா ருப்பேன் "இது ஆண்களுக்கிடையே இருக்கும் ஆண்குறி குறித்த மனப்பான்மை மற்றும் அவமானம் என்று கருதும் சில விஷயங்களை போக்குவதற்காக நடத்தப்பட்டது. ஆண்குறி சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவர்கள் உண்மையான நிலையை ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது" என்று கூறினார்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close