பெண்கள், குழந்தைகளைத் தாக்கும் இரத்தச் சோகை…எச்சரிக்கை டிப்ஸ்!

Loading...

* ‘நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் வளரும் இளம் பெண்களிடையே (11-19 வயது வரை) 60 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’.

* 80 சதவீதம் தாய்மார்களும், பெண்களும் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் மூவர் இரத்தச் சோகையுடனே வளர்கின்றனர்.

உள்ளிட்ட அதிர்ச்சி தகவல்களைக் கூறுகிறார் பொது மருத்துவரான டாக்டர் விஜய்கண்ணா. மேலும், இரத்தச் சோகைக்கான காரணம் மற்றும் தீர்வுகளை விவரிக்கிறார்.

இரத்தச் சோகை:
பொதுவாக, ஒரு மனிதனின் ஒரு கன மில்லி லிட்டர் இரத்தத்தில் 45 முதல் 50 லட்சம் சிவப்பணுக்கள் இருக்கும். இந்தச் சிவப்பணுக்களில் இருக்கும் சைட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின் என்ற நிறமி உள்ளது. இதுதான் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்குக் காரணம். 100 கிராம் இரத்தத்தில் 17 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும். மனித உடலில் ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 12-16 அளவிலும், பெண்களுக்கு 12-14 அளவிலும் இருக்கவேண்டும். இது 10-க்கும் கீழ் குறைந்தால் இரத்தச் சோகையும், 7-க்குப் கீழே குறைந்தால் இரத்தச் சோகை மிகவும் அதிக அளவில் இருக்கிறது என அர்த்தம்.

இரத்த சோகை வருவதற்கான காரணம்:
சாப்பிடும் உணவில் இரும்புச் சத்தின் அளவு மிகவும் குறைவாகுதல், பெண்கள் போதிய கால அவகாசம் இன்றி குழந்தை பெற்றுக்கொள்வது, பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவது, மாதவிலக்கின் போது பெண்களுக்கு அதிகமான அளவு இரத்தம் வெளியேறுதல், அடிக்கடி உடலில் இரத்த இழப்பு ஏற்படுதல் போன்றவை செயல்பாடுகளே முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

* கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்தில், ஆரோக்கியமான உணவினை சாப்பிடாமல் இருப்பதால் அவர்களுக்கு இரத்தச் சோகை வருவதுடன், குழந்தைகளும் இரத்தச் சோகை பாதிப்புடனே பிறக்கின்றனர்

* வீட்டு வேலை, அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தும் பெண்கள் ஆரோக்கியமான, சரிவிகித உணவினைச் சாப்பிடாமல் இரத்தச் சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.

* குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக சாப்பிடாமல் இருப்பதால் இரத்தச் சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

இரத்த சோகை வந்தவர்களும் வராமல் தடுக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள்:
* உணவில் கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பேரீச்சை, உலர் திராட்சை, எள்ளு, பட்டாணி, கோதுமை, நிலக்கடலை, தேன், வெல்லம், முட்டை, மீன், கருவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை உள்ளிட்ட திணை வகைகளைச் சாப்பிவதால் இரத்தச் சோகை வராமல் தடுக்கலாம்.

இரத்தச் சோகையை ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவரை அணுகி சரிசெய்துகொள்ள வேண்டும். மேலும் முறையான உணவு முறைகளைக் கடைபிடித்து இரத்தச் சோகையை வராமலும், வந்த பின்னரும் சரிசெய்துகொள்ளலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் முறையாக உணவுகளையும், மருந்துகளையும் சரியாக சாப்பிட்டு மாதம் தோறும் மருத்துவரை அணுகி இரத்தச் சோகை பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துகொள்வது சிறந்தது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close