கொழுப்பை குறைக்கும் கொள்ளு துவையல்

Loading...

உடல் எடை குறைய, கொழுப்பை கரைக்க கொள்ளு மிகவும் சிறந்தது. இப்போது கொள்ளு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கொழுப்பை குறைக்கும் கொள்ளு துவையல்
தேவையான பொருள்கள் :

கொள்ளு – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 4 மேஜைக்கரண்டி
புளி – 1 பாக்கு அளவு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு

செய்முறை :

* கறிவேப்பிலை, கொள்ளுவை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.

* மிக்சியில் வறுத்த கொள்ளு, தேங்காய் துருவல், புளி, பூண்டு, ப.மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கொள்ளு துவையல் ரெடி.

* ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close