ஒன்பதாம் மாதத்தில் கர்ப்பிணிகளின் உடலில் நடைபெறும் நிகழ்வுகள்!!!

Loading...

கர்ப்ப காலத்தின் ஒன்பதாவது மாதத்தின் முடிவில் நீங்கள் தாயாகி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையே இதற்கு பிறகு மாறப்போகிறது; அது நல்லதற்கென நம்புவோம். உங்களது இந்த பயணத்தின் கடைசி கட்டத்தில் சந்தோஷம், பதற்றம், மகிழ்ச்சி மற்றும் அச்சம் போன்ற உணர்வுகள் கலந்திருக்கும்.

உங்களது செல்லக்குட்டி இந்த உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், அதற்கான நாட்களை எண்ண வேண்டிய தருணம் இது. மேலும் இக்காலத்தில் கர்ப்பிணிகளின் உடலினுள் ஒருசில மாற்றங்கள் நிகழும். மேலும் குழந்தையும் பிறப்பதற்கு தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

இப்போது கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் கர்ப்பிணிகளின் உடலுக்கு மற்றும் குழந்தைக்கு என்ன நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்….

இடுப்பு வலி உங்கள் குழந்தையின் தலை இடுப்பு பகுதியில் இருக்கும் போது, உங்களுடைய கீழ் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி வலி வர நேரிடலாம். இது பிரசவ வலிக்கான அறிகுறியாக இருக்கலாம். அதனால் அவ்வகை வலி ஏற்படும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மார்பகங்களில் நீர்மம் ஒழுகுதல் உங்கள் மார்பகங்களின் உணர்வு திறன் அதிகமாக இருக்கும். அதனோடு சேர்த்து கனமாகவும், கொலஸ்ட்ரம் என்ற தெளிவான மஞ்சள் நிறத்திலான நீரும் ஒழுகிடும். இது தான் உங்கள் குழந்தைக்கான முதல் உணவாகும். உங்கள் உடல் தாய்ப்பால் கொடுப்பதற்கு தயாராகி விட்டது என்பதற்கான அறிகுறி இதுவாகும். அது வரை மார்பக பேட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

யோனி வெளியேற்றம் மற்றும் கறை படிதல் உணர்வு திறன் கொண்ட பகுதியை தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க, இயல்பான கார சமநிலையை மேம்படுத்துவதற்கு யோனி வெளியேற்றம் உதவும். மறுபுறம், கறை படிதல் ஏற்படும் போது, பிரசவம் தொடங்கி விட்டது என அர்த்தமாகும். இருப்பினும், கர்ப்ப காலத்தின் கடைசி மாதத்தில் கறை படிவதற்கு வேறு சில மருத்துவ காரணங்களும் உள்ளது. அதனால் இரத்தக்கறையைக் கண்டால் உடனே மருத்துவரிடம் தொடர்பு கொண்டு, மருத்துவமனைக்கு வர வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பொய்யான சுருங்குதல்கள் இதனை பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருங்குதல்கள் என்றும் அழைக்கின்றனர். இவை 30 நொடிகளுக்கு மட்டுமே நீடிக்கும். அதன் பின் தானாகவே சென்று விடும். ஆனால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, 30 நொடிக்கு மேல் இந்த வலி நீடித்து, அதனுடன் சேர்ந்து கீழ் முதுகில் வலியும் எடுத்தால், உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள். ஏனெனில் அது பிரசவ வலியாக இருக்கலாம்!

குழந்தையின் சருமம் மென்மையாகும் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையின் மீது மூடப்பட்டு, அதனை பாதுகாத்து வரும் மெல்லிய முடியான அரும்புமயிர், குழந்தை பிறந்தவுடன் உதிர தொடங்கும்.

சுவாசிக்கும் நுட்பங்களை குழந்தை பழகும் உங்கள் பிரசவ நாள் நெருங்குகையில், மூக்கின் வழியாக பனிக்குட நீரை உள்ளிழுத்து, வெளியேற்றி, சுவாசிக்கும் நுட்பங்களை உங்கள் குழந்தை பழகும். கருவில் இருந்து வெளியே வரும் போது உயிருடன் இருக்க உங்கள் குழந்தை எடுக்கும் பயிற்சி இது.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் கடைசி சில தினங்களில், உங்கள் தொப்புள் கொடி உங்கள் குழந்தைக்கு ஆன்டி-பயாடிக்ஸை அளிக்கும். இதனால் பிரசவத்திற்கு பின்பு, தொற்றுக்களை எதிர்த்து போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். பிரசவத்திற்கு பின்பு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், அதன் நோய் எதிர்ப்பு சக்தி இன்னமும் மேம்படும். இதனால் அதன் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

குழந்தையின் பிறப்பு அனைத்தும் நல்லபடியாக சென்றால், இந்த மாதத்தில் நீங்கள் பிரசவ அறைக்கு செல்ல நேரிடலாம். கடைசி இரண்டு வாரங்களில் அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் பிரசவத்திற்கான அறிகுறிகளை கவனித்த படி இருக்கவும். மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதையெல்லாம் தயார் செய்து கொள்ளவும். அது சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி அல்லது சிசேரியானாக இருந்தாலும் சரி, குழந்தையின் பிறப்பு என்பது அந்த வலிகள் அத்தனையும் ஓரங்கட்டி விடும். பிறந்த குழந்தையை உங்கள் கண்ணால் காணும் போது உங்களுக்கு தெரியும், பேரின்பம் என்றால் என்னவென்று!

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close