உங்கள் அந்தரங்கப் பகுதியில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!

Loading...

உடலில் கருமையாக இருக்கும் பகுதிகளில் ஒன்று அந்தரங்கப் பகுதியும் ஒன்று. இப்பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க முடியாதா என்று பலரும் நினைப்பதுண்டு. நிச்சயம் அப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க முடியும். அதுவும் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அவற்றைப் போக்கலாம்.

இயற்கையான பொருட்கள் என்பதால் இது அப்பகுதியில் எவ்வித அழற்சியையும் ஏற்படுத்தாது. சொல்லப்போனால் இது தான் பாதுகாப்பான வழியும் கூட. சரி, இப்போது உங்கள் அந்தரங்கப் பகுதியில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்.

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் எலுமிச்சைக்கு ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதன் சாற்றினை அந்தரங்கப் பகுதியைச் சுற்றி தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், 1-2 மாதங்களில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமை போயிருப்பதைக் காணலாம். ஆனால் இச்செயலை செய்யும் போது அந்தரங்க பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்ய வேண்டாம்.

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, குளித்து முடித்த பின் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சந்தனம் கருமையைப் போக்குவதோடு, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். ரோஸ்வாட்டர் டோனர் என்பதால், அதுவும் கருமையைப் போக்கும். இந்த செயலை வாரத்திற்கு 3 முறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

கற்றாழை ஜெல் வீட்டில் கற்றாழை செடி இருந்தால், அதன் ஜெல்லை அந்தரங்கப் பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் குளித்து முடித்த பின் செய்து வர, விரைவில் அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமை மறையும்.

தயிர் தினமும் தயிரைக் கொண்டு அந்தரங்கப் பகுதியை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, சில வாரங்களில் அப்பகுதியில் உள்ள கருமை மறைவதைக் காணலாம். இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தான் காரணம். மேலும் தயிர் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மஞ்சள் எலுமிச்சையைப் போன்றே ஆரஞ்சு பழத்திலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அத்தகைய ஆரஞ்சு சாற்றுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் அந்தரங்க பகுதியைச் சுற்றி 20 நிமிடம் கழித்து கழுவ, கருமை சீக்கிரம் நீங்கும்.

கடலை மாவு கடலை மாவை தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அந்தரங்கப் பகுதியைச் சுற்றி தடவி உலர்ந்ததும், நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

குறிப்பு இயற்கை வழிகளை பின்பற்றும் போது, பொறுமை என்பது மிகவும் அவசியம். ஏனெனில் இயற்கை வழிகளால் பலனை வேகமாக பெற முடியாது. ஆனால் தாமதமாக பலனைப் பெற்றாலும், அது நிரந்தரமானது என்பதை மறவாதீர்கள்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close