வறண்ட சருமப் பிரச்சனையா? இதோ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

Loading...

சருமத்தில் எந்த தழும்பும் இல்லாமல், பொலிவாக இருப்பதை ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். ஆனால் இயற்கையிலேயே எல்லாருக்கும் அப்படி அமைந்துவிடுவதில்லை.

சிலருக்கு எண்ணெய் வழியும் முகம், முகப்பருக்கள் கூடிய முகம், சிலருக்கு வறண்ட சருமம், களையே இல்லாமல் சுருக்கம் விழக் கூடிய முகம் என சரும பிரச்சனைகளால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வறண்ட சருமத்தில் இருக்கும் ஒரே நன்மை முகப்பருக்கள் அவர்களுக்கு வராது. ஆனால் வறண்ட சருமத்தினால் உண்டாகும் தீமை என்னவென்றால், எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும்.

எரிச்சல், அரிப்பு, என பிரச்சனைகளை தரும். எளிதில் தொய்வடைந்து விடும். பொலிவேயில்லாமல் இருக்கும்.

மழைக்காலம் தொடங்கியாச்சு, இனி சருமத்தில் ஈரத்தன்மை குறைந்து வறண்டு போக ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில்தான் தேவையான அளவு ஈரப்பதம் சருமத்திற்கு தருவது அவசியம். வறண்ட சருமத்தில் ஈரப்பதம் அளித்து, போதிய போஷாக்கோடு வைத்திருக்கும் ஒரு எளிய வழி உங்கள் வீட்டு சமையலறையில் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போமா?

தேவையானவை : தக்காளி – பாதி அளவு தயிர் – 2 டேபிள் ஸ்பூன் அவகாடோ – 2 டேபிள் ஸ்பூன்

இவை மூன்றுமே உங்கள் வறட்சியான சருமத்தில் ஈரப்பதம் அளிக்கிறது. அழுக்களை நீக்கி, சுருக்கங்களை போக்குகிறது. சருமதுவாரங்களை இறுகச் செய்கிறது. சருமத்தை மிளிரச் செய்கிறது.

சருமத்தில் அமில காரத்தன்மை மாறுபட்டால் சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடும். இந்த கலவை அமில காரத் தன்மையை சமன் செய்கிறது.

செய்முறை : மேலே சொன்ன மூன்றையும் மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போலாகிக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காய விடவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

வாரம் 3 நாட்கள் செய்யுங்கள். சருமம் இறுகி, மென்மையாகும். சுருக்கங்கள் இல்லாத பளபளப்பான சருமம் கிடைக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close