20 நிமிடங்களில் கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி?

Loading...

நம் உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். அப்படி கருமையாகும் பகுதிகளில் ஒன்று தான் கழுத்து. இந்த கழுத்தைச் சுற்றி கருப்பு நிற படலம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் நீண்ட நேரம் அவ்விடத்தில் சூரியக்கதிர்கள் பட்டால், மோசமான சுகாதாரம், நீரிழிவு போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் இப்படி கழுத்தில் உள்ள கருமையை எளிமையான மூன்று செயல்களின் மூலம் உடனே போக்கலாம். குறிப்பாக இந்த மூன்று செயல்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் 20 நிமிடங்கள் தான். இந்த 20 நிமிடங்களிலேயே கழுத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்…

செயல் #1

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க முதலில் செய்ய வேண்டியது, சுடுநீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து, அதனை கழுத்தில் 2-3 நிமிடம் வைக்கவும். இப்படி செய்வதால் கழுத்தில் உள்ள சருமத்துளைகள் திறக்கப்பட்டு, அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

செயல் #2

அடுத்ததாக ஸ்கரப் செய்ய வேண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் உப்புடன், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் உப்பு சேர்த்து, பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த கலவையை கழுத்தில் தடவி, பஞ்சு கொண்டு 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் பேக்கிங் சோடா மற்றும் உப்பு கழுத்தில் உள்ள கருமையைப் போக்கும் மற்றும் ஆலிவ் ஆயில் நல்ல மாய்ஸ்சுரைசராக செயல்படும்.

செயல் #3

மூன்றாவதாக கருமையைப் போக்கும் மாஸ்க் போட வேண்டும். அதற்கு சந்தனப் பொடியுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, பின் பால் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

இந்த மூன்று செயல்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கழுத்தில் உள்ள கருமை மறைந்திருப்பதை நன்கு காணலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close