தேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா கலந்து முகத்தில் தேய்த்தால் எவ்வளவு நல்லதுன்னு தெரியுமா?

Loading...

சரும பிரச்சனைகளை சந்திக்காதவர் எவரும் இலர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திப்போம். இப்படி சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனி க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஓர் எளிய நேச்சுரல் ஃபேஸ் க்ளின்சர் உள்ளது.

அதிலும் தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா கொண்டு செய்யப்படும் இந்த கிளின்சர், அனைத்துவிதமான சரும பிரச்சனைகளையும் போக்கும். மேலும் இந்த கிளின்சர் செய்வது என்பது மிகவும் ஈஸி.

இந்த கிளின்சர் கொண்டு கிளின்சிங் செய்தால், சருமத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், அழுக்குகள் போன்ற முழுமையாக நீக்கப்படுவதோடு, சருமத் துளைகள் சுத்தம் செய்யப்பட்டு, கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக இந்த நேச்சுரல் கிளின்சரை சருமத்தின் இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்.

சரி, இப்போது அந்த நேச்சுரல் ஃபேஸ் க்ளின்சரை எப்படி செய்வதென்றும், எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றும் பார்ப்போம். இந்த நேச்சுரல் கிளின்சர் ஒரு பாதுகாப்பான முறை என்பதால், எவ்வித அச்சமுமின்றி பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

செய்யும் முறை: * முதலில் அனைத்து பொருட்களை ஒரு பௌலில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதனை முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து, 5-6 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

முகத்தை கழுவும் முன் மீண்டும் சிறிது நேரம் மென்மையாக தேய்த்து கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, சரும பிரச்சனைகளின்றி, முகம் பொலிவோடும், இளமையோடும் இருக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close