ஸ்ட்ராபெர்ரியும் தயிரும் உங்கள் முகத்திற்கு என்ன செய்யும்?

Loading...

ஸ்ட்ரா பெர்ரி : ஸ்ட்ரா பெர்ரியை பிடிக்காதவர்கள் இல்லை. அதன் நிறமும் சுவையும் எல்லாரையும் சுண்டி இழுக்கும். விட்டமின் சி நிறைந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ள பழம்.

இளமையை மீட்டெடுக்கவும் உதவும். சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு வெளிப்புறமாய் அழகிற்கும் நன்மையைத் தருகிறது.

தயிர் : தயிரில் விட்டமின், புரோட்டின், கால்சியம் உள்ளது. கொழுப்பும் லாக்டிக் அமிலமும் உள்ளது. உடல் பலத்திற்கு வலு சேர்க்கின்றது. இதை அழகிற்காக பயன்படுத்துவது புதிதல்ல. கருமையை போக்கும் இயற்கையான ப்ளீச்.

ஸ்ட்ரா பெர்ரியை மசித்து தயிருடன் கலந்து முகத்தில் மாஸ்க் போல போட்டால், எவ்வாறு நம் சருமத்திற்கு அழகூட்டும் என பார்க்கலாம்.

இளமையை நீட்டிக்க : விட்டமின் சி நிறைந்த இந்த இரண்டும், சருமத்திற்கு ஊட்டம் அளித்து, இறந்த செல்களை வெளியேற்றுகிறது. சுருக்கங்களை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சருமம் இறுகி, சுருக்கங்கள் இல்லாமல் காணப்படும்.

முகப்பருவை போக்க : இரண்டிலும் பேக்டீரியா எதிர்ப்புத் திறன் அதிகமாக உள்ளது. இவை முகத்தில் உண்டாகும் முகப்பருக்களின் மீது செயல்புரிந்து அவற்றை போக்கச் செய்கிறது.

சூரிய கதிர்களிடமிருந்து இயற்கையான பாதுகாப்பு வளையம் :
இவை இரண்டும் இயற்கையான சன் ஸ்க்ரீன் பாதுகாப்பு வளையமாக செயல் படுகிறது. ஸ்ட்ரா பெர்ரியிலிருக்கும் எல்லாஜிக் அமிலம் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் சக்திவாய்ந்த சூரிய கதிரிடமிருந்து பாதுகாப்பு தருகிறது.

எண்ணெய் சருமத்தை குறைக்கும் : முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை தடுக்கிறது. சருமத்தில் மாசுக்களை சேர விடாமல் காக்கிறது. கரும்புள்ளி, மரு ஆகியவை வரவிடாமல் உதவி புரிகிறது.

நிறத்தினை அதிகரிக்கும் : இந்த இரண்டிற்கும் ப்ளீச் செய்யும் ஆற்றல் உள்ளது. இவை கருமையை உள்ளிருந்து நீக்கி, சருமத்திற்கு நிறத்தினை அதிகரிக்கச் செய்யும்.

சரும அலர்ஜியை தடுக்கும் : சருமத்தில் கிருமிகளின் தொற்றால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயங்களில் இந்த கலவையை போட்டால், அலர்ஜியினால் உண்டாகும் எரிச்சல், தடிப்பு, வீக்கம் ஆகியவை கட்டுப்படும்.

ஈரப்பதம் அளிக்கும் : இவை இரண்டும் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. வறட்சி, சுருக்கங்களை மறையச் செய்கிறது. இதனால் சருமம் பொலிவாய் மிளிரும்

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close