உங்கள் அழகின் ரகசியம் ஆப்பிளிலும் ஒளிந்திருக்கலாம்!!

Loading...

ஆப்பிள் உடல் நலத்திற்கு நல்லது என புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. தோலுடன் சாப்பிடக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் நிறைய விட்டமின்கள், மினரல் சத்துக்கள் உள்ளன.

அதுபோலவே நம் சருமத்திற்கான அழகுக் குறிப்புகள் ஆப்பிளிடம் நிறைய இருக்கிறது என தெரியுமா?

அவை சருமத்தில் நிறைய நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும். சுருக்கங்கள், கருமை, போக்கி, தேகத்திற்கு மினுமினுப்பை அள்ளித் தரும்.

ஆப்பிளை அரைத்து பேக்காக முகத்தில் போடுவதால் உண்டாகும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். முகத்திற்கு இளமையை தரும் :

முகத்திற்கு இளமையை தரும் : ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் இளமையாக முகம் இருக்கும்.

ஆப்பிள் +தயிர் மாஸ்க் : ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அதிகப்படியான எண்ணையை உறிஞ்சுகிறது. முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.

ஆப்பிள் +வாழைப்பழம் பேக் : இரண்டையிம் மசிந்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வாருங்கள். அற்புதமான ஸ்கின் டோனர் இந்த கலவை. உங்கள் சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும், பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.

ஆப்பிள் + கிளசரின்

இந்த மழைக்காலத்தில் சருமம் வறண்டு போகும். அதற்கு இந்த கலவை வரப் பிரசாதம். ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளசரின் சேர்த்து முகத்தில் தடவி வாருங்கள். சருமத்தில் வறட்சி காணாமல் போய் மினுமினுக்கும்.

சன் ஸ்க்ரீன் லோஷன் : சருமத்தில் வெய்யிலில் ஏற்படும் கருமையை தடுக்கும் சுவராக ஆப்பிள் செயல் படும். ஆப்பிளில் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவுங்கள்.

காய்ந்ததும் கழுவிவிடலாம். இவை புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். கருமையை அகற்றும்.

உடனடி ஜொலிப்பை பெற : நீங்கள் ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால் திடீரென பார்லர் போய்கொண்டிருக்க முடியாது. அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும்.

ஆப்பிள்சாறு மற்றும் மாதுளைம்பழச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்தபின் கழுவினால் முகத்தில் இன்ஸ்டென்டாய் அழகு மிளிரும்.

கரும்புள்ளிகள் மறைய :
முகத்தில் கரும்புள்ளிகள், கருப்பு திட்டுக்கள் இருந்தால் அதற்கு எளிய தீர்வு இது. ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலக்கி முகத்தில் பேக்காக போடுங்கள். ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close