மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

Loading...

எளிய முறையில் மாதம் ஒரு கிலோ எடையை எப்படி குறைக்கலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்
நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு செல்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. தொப்பை வந்துவிடுகிறது.

உடல் எடை ஒரே நாளில் அதிகரிப்பது கிடையாது. எனவே, உடல் எடை சீக்கிரமே குறைந்துவிட வேண்டும் என எண்ணுவதும் தவறு. உடல் எடையை படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு கிலோ எடையை சீராகக் குறைத்துவருவது நல்லது. அதிக உடல் பருமன் இருப்பவர்கள் மட்டும் மாதம் 2.5-4 கிலோ எடையை குறைக்கலாம்.

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளுதல் இந்த மூன்றையும் ஒரே சமயத்தில் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். டயட் மூலமாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, முதல் இரண்டு, மூன்று மாதங்கள் எடை குறையும். பிறகு, உடல் எடை குறையாது. கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உணவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடை குறைக்கும் சிகிச்சைகள், தற்காலிகமாக மட்டுமே எடையைக் குறைக்கும். இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். திடீரென எடையைக் குறைப்பதைவிட, வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலம், எடையைக் குறைப்பதுதான் சிறந்தது.

சினிமாவில், டி.வி ரியாலிட்டி ஷோக்களில் எடை குறைப்பவர்கள், எடை குறைப்பதையே ஒரு வேலையாகச் செய்வார்கள். நிஜ வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை.

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது, மிகக் குறைவாகத் தண்ணீர் அருந்துவது இரண்டுமே தவறு. மனித உடலுக்கு, தினமும் 1.5 லிட்டர் தண்ணீர் மட்டுமே அத்தியாவசியத் தேவை. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க 2 -3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் அருந்துபவர்களுக்கு, கொழுப்பு செல்கள் விரிந்து உடல் பருமன் அதிகமாகும்.

வளர் இளம் பருவத்தில் தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவது நல்லது. முட்டையில் இருக்கும் முக்கியமான புரதச் சத்துக்கள் உடலுக்குத் தேவை. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில், ஒரு நாளுக்குத் தேவையான அளவு, கொழுப்புச் சத்து இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட வேண்டாம்.

இளைஞர்கள் இரவு நேரத்தில் ஆஃப்பாயில், ஆம்லேட் என முட்டை சாப்பிடுகின்றனர் இது தவறு. முட்டை செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். எனவே, வேகவைத்த முட்டைகளை, காலை அல்லது மதிய வேளைகளில் சாப்பிடுவது சிறந்தது.

கீரையில் நார்ச்சத்து மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான சில நுண் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு இருக்கின்றன. தினமும் மதிய உணவில் கீரை சேர்ப்பது அவசியம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close