குழந்தையில்லா தம்பதிகளுக்கான… கருவுறாமையை சமாளிக்க புதிய விந்து பகுப்பாய்வு சோதனை!

Loading...

தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பல தம்பதியர்கள் குழந்தை இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் குழந்தை வரம் வேண்டி பல கடவுள்களை வணங்கி வருகின்றனர். அத்தகைய குழந்தையில்லா தம்பதிகளுக்காக சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அது என்னவெனில், குழந்தையில்லாத தம்பதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் பொருட்டு, விஞ்ஞானிகள் குழு அடுத்த தலைமுறை வரிசைமுறையின் அடிப்படையில் விந்து ஆர்.என்.ஏ-விற்கான முதல் பகுப்பாய்வு சோதனையை மேம்படுத்தியுள்ளனர். கருவுறுதலில் சிரமம் உள்ள ஜோடிகளுக்கு சிகிச்சை அளிக்க இது மிகவும் சிறந்ததாகும்.

ஸ்டீபன் க்ராவேட்ஸ் கூற்று… வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் க்ராவேட்ஸ் கூறுவதாவது, இனப்பெருக்க தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்தபட்ச தலையீட்டுடன் வெற்றிகரமாக குழந்தைப் பிறக்கக்கூடிய தம்பதிகளைக் கண்டறிய இது உதவும்"

அறிவியல் இயக்க மருத்துவம் வெளியிட்ட ஆய்வு… அறிவியல் இயக்க மருத்துவம் வெளியிட்ட ஆய்வில், விந்து அளவுருக்கள் சாதாரணமாக இருக்கும் போது கூட ஆண் காரணிகள் எவ்வாறு தம்பதிகளிடையே மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது என்பதை விளக்குகிறது. விந்தணுவின் ஆர்.என்.ஏ அடுத்த தலைமுறை வரிசைமுறை பயன்பாட்டின் மூலம், குறிப்பிட்ட அளவு தந்தை வழி பங்களிப்பை வழங்க முடியுமாம்.

ஆரோக்கியமான குழந்தை மலட்டுத்தன்மையிலிருந்து மீண்டு வர தம்பதிகளுக்கு இது ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும். தந்தையின் பங்களிப்பை அடையாளம் காண்பது மூலம் குழந்தையின் ஆரோக்கியமான பிறப்பை உறுதி செய்யும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதாக க்ராவேட்ஸ் கூறியுள்ளார்.

கறுவுறுதலுக்கு வழி செய்யும் இந்த கண்டுபிடிப்புகள், கருவுறுதலுக்கு வழி செய்வதோடு, குழந்தையில்லா தம்பதிகளின் மீது ஒரு வியத்தகு மற்றத்தைக் கொண்டு வருகின்றது. விந்து அளவுருக்களின் மதிப்பீடு, ஆண் மலட்டுத்தன்மையை ஆய்வு செய்து கண்டறிய பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் ஒரு அளவுருக்கள் மற்றும் தொகுப்பு அளவுருக்கள் கொண்டு ஆண் இனப்பெருக்கத் தன்மையை முன்னறிவிக்க இயலாது.

சிறந்த சிகிச்சை இது ஒரு துல்லியமான இனப்பெருக்க மருத்துவத்தை விட ஒரு படி மேலே உள்ளதால், தம்பதிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க வழிகாட்டுகிறது. இந்த சோதனையின் போது நோயாளிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறை இரண்டிற்கும் செலவு சேமிப்பு சாத்தியம் உள்ளது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close