ஃபேஷன் டிசைனிங் துறையில் எதிர்காலம் இருக்கிறதா?

Loading...

ஃபேஷன் டிசைனிங் துறைக்கு எப்போதுமே வரவேற்பு குறைவதில்லை. நீங்கள் வடிவமைக்கிற ஆடை அழகாக இருக்கிறது என்பதை விடவும், அந்த ஆடையை அணிகிறவர் அழகாகத் தெரிய வேண்டும் என்பதே இதில் முக்கியம். ஒருவரை அவரது இயல்பான தோற்றம் தாண்டி, இன்னும் அழகுடனும் பாங்குடனும் காட்ட வைக்கிற சவாலான வேலை ஃபேஷன் டிசைனருடையது.ஃபேஷன் டிசைனிங் என்பது வெறுமனே ஆடைகள் சம்பந்தப்பட்டது

மட்டும் இல்லை. உடையுடன் நீங்கள் அணிகிற வளையல், கழுத்தணி, காதணி, பெல்ட், காலணிகள் வரை எல்லாம் அதில் அடக்கம். நம்மூரில் ஃபேஷன் டிசைனிங்கிற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. அதற்கேற்ற வகையில் போதுமான ஃபேஷன் டிசைனர்கள் இல்லை என்பதே உண்மை.

எப்போதும் தன்னைத் தனித்துவத்துடன் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு அதை நிறைவேற்றிக் கொடுக்கும் தகுதி கொண்டவர்களாக ஃபேஷன் டிசைனர்கள் இருக்க வேண்டும். இன்று நிறைய பிரபலங்கள், சினிமா பிரமுகர்கள் எனப் பலரும் தமக்கென தனியே ஒரு டிசைனரை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு Haute couture என்று பெயர். திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்கிறவர்களுக்கு இப்படி பிரபலங்களுக்கு டிசைனராகிற வாய்ப்பு கிடைக்கும்.

சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்ய ஆர்வமுள்ளோருக்கும் இந்தத் துறை சரியான சாய்ஸ். டெய்லரிங் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிற இல்லத்தரசிகள், ஒரு படி மேலே போய் வெறும் டெய்லரிங் மட்டுமின்றி, கூடவே ஒரு கார்மென்ட் டிசைனிங் அல்லது ஃபேஷன் டிசைனிங் பயிற்சியையும் கற்றுக் கொண்டால் அதன் மூலம் அவர்களுக்குப் பெரிய வருமானம் வரும். இந்தப் பயிற்சியை முடித்ததும் விருப்பமுள்ளவர்கள் சிறியதாக ஒரு ரெடிமேட் யூனிட் தொடங்கலாம். பொட்டிக் வைத்து நடத்தலாம்.

வயது இதற்கு ஒரு தடையில்லை. இல்லத்தரசிகள் பகுதிநேரமாகக் கூட ஃபேஷன் டிசைனிங் பயிற்சியை முடிக்கலாம். தினம் 2 மணி நேரம் படிக்கிற 1 வருடப் பயிற்சி வகுப்புகள் கூட இருக்கின்றன. வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு, ஃபேஷன் டிசைனிங்கிலும் நிபுணத்துவம் பெறலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close