முகத்தில் சுருக்கங்களை போக்கி மிளிரச் செய்யும் க்ரீன் டீ !!

Loading...

நமது சமையலறையில் இருக்கும் எல்லா பொருட்களுமே அரோக்கியம் மற்றும் அழகிற்கு நன்மைகளே செய்கின்றன. அவ்வகையில் இப்போது நாம் பார்க்கபோவது க்ரீன் டீ.

க்ரீன் டீயில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது உடலுக்கு நன்மை தருகிறது என சொல்லியும், கேட்டும் சலித்திருப்பீர்கள்.

இருந்தாலும் உடலுக்கு எது நல்லதோ அதனை பார்த்து பார்த்து, அவற்றில் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று அறிவதுதானே மனித அறிவின் இயல்பு.

அப்படி இந்த அழகுப் பகுதியில் நாம் க்ரீன் டீ கொண்டு முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளி, மற்றும் சரும பிரச்சனைகளை எப்படி தீர்க்கலாம் என பார்ப்போம்.

க்ரீன் டீ கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஃபேஸியல் மாஸ்க் சருமத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

சில குறிப்பிட்ட பேக்டீரியாக்களின் தொற்றுக்களால் சருமத்தில் கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகள் எனத் தோன்றும். அவற்றை முழுவதுமாக அழிக்கும் சக்தி கொண்டது க்ரீன் டீ. அதோடு இறந்த செல்களையும் அகற்றிவிடும்.

க்ரீன் டீ மாஸ்க் தயாரிக்க என்னென்ன தேவை என பார்க்கலாம் :

தேவையானவை : க்ரீன் டீ த்தூள் – 2 டீ ஸ்பூன் சமையல் சோடா- 2 டீ ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்

அரை கப் நீரில் 2 டீஸ்பூன் க்ரீன் டீத்தூளை கலந்து கொதிக்க விடுங்கள். நன்றாக டீத்தூள் நீரில் இறங்கியதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது க்ரீன் டீ டிகாஷன் தயார். ஆறியதும், இந்த டிகாஷனில் சமையல் சோடா, தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி வாரம் 3 முறை செய்தால் சுருக்கங்கள் மறைந்துவிடும். இளமையாக முகம் இருக்கும். அதோடு மட்டுமின்றி, பளபளப்பான சருமம் கிடைக்கும். தொய்வடைந்த சருமம் இறுகி, பளிச்சென்று இருக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close