நரைமுடியை தங்க நிறமாக மாற்றும் எலுமிச்சை சாறு-ஈஸி டிப்ஸ்

Loading...

அலுவலகத்தில் மற்றும் விசேஷங்களுக்கு நரைத்த முடியோடு போக முடியாது. அதே சமயம் கெமிக்கல் கலந்த டை உபயோகிக்கவும் மனமில்லை என்று நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம். இது எக்ஸ்க்ளூசிவ் சாய்ஸாதான் இருக்கும்.

எலுமிச்சையைக் கொண்டு, உங்கள் நரைத்த முடியை மாற்றலாம். உங்களுக்கு விருப்பப்பட்ட பிரவுன் அல்லது தங்க நிறத்தில் மாற்றலாம். இது வெள்ளை நிறத்தை மங்கச் செய்யும் . இந்த டையை எப்படி செய்வது என பார்க்கலாம்

தயாரிக்கும் முறை : தேவையானவை : எலுமிச்சை சாறு – தேவையான அளவு (உ.ம்- 1 கப்) நீர் – தேவையான அளவு (உ.ம்.-1 கப்) பட்டைப்பொடி – 2ஸ்பூன்

முதலில் உங்கள் தலைமுடிக்கு தேவையான எலுமிச்சைகளை எடுத்து நன்றாக உருட்டிக் கொளுங்கள். அப்போதுதான் நிறைய எலுமிச்சை சாறு கிடைக்கும்.

பின் எலுமிச்சை சாறு எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது ஒரு கப் நீரினை கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து, எலுமிச்சை சாறினை கொதிக்கை வைத்த நீருடன் கலக்கவேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் நீரின் அளவு சமமாக இருக்க வேண்டும். இவற்றுள் பட்டைபொடியை கலக்குங்கள்.

இப்போது அந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொண்டு, உங்கள் தலைமுடி முழுவதும் ஸ்ப்ரே செய்யுங்கள். தலைமுடி முழுக்க நனைந்ததும்,ஒரு சிறிய மெல்லிய துணிக் கொண்டு மீதமுள்ள எலுமிச்சை சாறு கலவையை நனைத்து தலை முடிகளில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை தேயுங்கள்.

பின்னர் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் அமருங்கள். அது காய்ந்து நிறம் மாறும். ஒரு ஓய்வான நேரத்தை தேர்ந்தெடுத்து இதனை செய்யுங்கள். காய்ந்த பின் மீண்டும் இந்த கலவையை தலையில் தேய்த்து மீண்டும் அரை மணி நேரம் சூரிய ஒளியில் அமருங்கள்.

பின்னர் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கவும். கண்டிஷனர் உபயோகப்படுத்துவது நல்லது. எலுமிச்சையின் அமிலத்தன்மை தலைமுடியில் இருக்கும். இவை முடியை மேலும் வறண்டு போகச் செய்யும். ஆகவே கண்டிஷனர் உபயோகித்தால், அது அமிலத்தன்மையை சமன்படுத்தும்.

பட்டைபொடி, கூந்தலுக்கு பிரவுன் மற்றும் அடர் தங்க நிறத்தை தரும். சீமை சாமந்தி :

சீமை சாமந்தி : பட்டைப்பொடிக்கு பதிலாக சீமை சாமந்தியும் உபயோகப்படுத்தலாம். சீமை சமந்தியை நீரில் போட்டு கொதிக்க வைத்து , அந்த நீரில் எலுமிச்சை சாறு கலந்தாலும் பயன் தரும். இது கூந்தலுக்கு அழகிய தங்க நிறத்தை தரும்.

இவற்றுடன் தேன் கலந்தாலும் கூந்தலில் ஈரப்பதம் போகாமல் தக்க வைக்க உதவும். இந்த டையை உபயோகித்து பாருங்கள். செய்வது மிக எளிது. அதிக பொருட்கள் தேவையில்லை. நிச்சயம் நல்ல பலன் தரும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close