உதட்டை மிருதுவாக்கும் அரோமா லிப் பாம் – செய்ய செம ஈஸி!

Loading...

அரோமாதெரபி நம் உடல், மனம் மூளை என எல்லாவற்றையும் சம நிலைப்படுத்தி, புத்துணர்வை தரும்.

அவ்வாறு அரோமா கலந்து செய்யப்படும் இந்த மாதிரியான லிப் பாம், உதட்டில் அருமையாக செயல்புரிந்து, அங்கே சருமத்தை மேலும் மெருகூட்டும்.

இதனை தயாரிக்க நீங்கள் இயற்கையை மட்டுமே நாடுகறீர்கள். மூலிகைச் செடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாறிலிருந்து கொண்டு செய்யப்படும் லிப் பாம் முற்றிலும் ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.

ஆன்டி ஆக்ஸிடென்ட்தான் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியவை. நல்ல ஆரோக்கியமான செல்களை தாக்கக் கூடிய ஃப்ரீ ரேடிகல்ஸினை அழிக்கும் சக்தி கொண்டவை. இந்த் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த லிப் பாம்களை எப்படி தயார் செய்வது என பார்க்கலாம்.

பிரவுன் நிற லிப் பாம் : தேவையானவை : தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் தேன் மெழுகு – 3 டீ ஸ்பூன் பிரவுன் நிற சாக்கலேட் – 1 டீ ஸ்பூன்.

மேலே கூறியுள்ள மூன்றினையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை நேரடியாக சூடுப்படுத்தக் கூடாது. ஆகவே வேறொரு அகன்ற பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி, அதில் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும்.

அடுப்பினை குறைந்த தீயிலேயே வைத்திருங்கள். நன்றாக இந்த கலவை கரைந்ததும், எடுத்து ஆற வைக்கவும். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது அதனை உதட்டில் பூசிக் கொள்ளுங்கள்.

தாவர வெண்ணெய்+தேன் மெழுகு+புதினா எண்ணெய் இந்த லிப் பாம் உங்கள் உதட்டிற்கு அழகு சேர்க்கும். கருமையை போக்கி, அழகான ஈர்ப்பான உதடுகளைத் தரும்.

தாவர வெண்ணெய் என்பது நட்ஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய். இதனை ஷியா பட்டர் என்று சொல்வார்கள். அழகு சாதனக் கடைகளில் கிடைக்கும்.

ஒரு வாய் குறுகிய பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இன்னொரு கிண்ணத்தில் தாவர வெண்ணெய், தேன் மெழுகு மற்றும் புதினா எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.

பின் இந்த கிண்ணத்தை , அடுப்பில் வைத்திருக்கும், பாத்திரத்தின் மேல் வையுங்கள். பாத்திரத்திலுள்ள நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அதன் ஆவி தரும் வெப்பமே, கலவையை சூடுபடுத்த போதுமானது.

நன்றாக அக்கலவை கரைந்ததும், எடுத்து ஆற விடுங்கள். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தினமும் இந்த லிப் பாமைபோட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் உதடுகளில் ஏற்படும், வெடிப்பு, வறட்சி, கருமை ஆகியவை காணாமல் போய், மிருதுவான அழகான உதடு கிடைக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close