நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்

Loading...

நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை.

நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்
நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை. அவை பற்றி…

* சராசரியாய் ஒரு மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* தும்மும்போது கண்களைத் திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நமது கண் விழியின் சராசரி எடை 28 கிராம்.

* நமது உடலில் ‘உவுலா’ என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்குப் பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுசதையே ‘உவுலா’ எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. எலும்புகளின் உட்புறம் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்பு 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்துக்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்துக்கு 13 லிட்டர் ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

* தும்மலின்போது ஏற்படும் காற்றின் வேகம் மணிக்கு 166 கி.மீ. இருமலின் வேகம் 100 கி.மீ.

* நமது மூக்கே ஒரு ஏர்கண்டிஷனர் சாதனம்தான். அது சூடான காற்றை குளுமையாக ஆக்குகிறது. குளிர்ந்த காற்றைச் சூடாக்குகிறது. அத்துடன், அசுத்தங்களை வடிகட்டுகிறது.

* தாமிரம், துத்தநாகம், கோபால்ட், கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பேட்கள், நிக்கல், சிலிக்கான் இவையெல்லாம் நம் உடம்பில் உள்ளன.

* ஒவ்வொரு மனிதனின் கை ரேகையைப் போலவே கால் ரேகையும், நாக்கு ரேகைகளும்கூட தனித்தன்மை வாய்ந்தவை.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close