அழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா? விளக்கெண்ணெயில் ஒரு எளிய தீர்வு

Loading...

விளக்கெண்ணெய் கிராமங்களில் உபயோகிக்கும் ஒரு அற்புதமான அழகு சாதனம். அவர்களுக்கு எளிதில் முடி நரைக்காது.

காரணம் அவர்கள், விளக்கெண்ணெய்தான் தலைக்கு பயன்படுத்துவார்கள். அதனால்தான் அவர்களின் கூந்தல் கருமையாக அடர்த்தியாக இருக்கும். விளக்கெண்ணெயின் பயன்களை பார்ப்போம் .

இமை அடர்த்தியாய் வளர : விளக்கெண்ணெய் முடியை அடர்த்தியாக நீண்டு வளரச் செய்யும். கருமையான கூந்தலை தரும். இமைகளில் முடி இல்லையென்றால் விளக்கெண்ணெய் தடவி வந்தால், பெரிய இமைகள் கிடைக்கும்.

ஆர்த்ரைடிஸ் : ஆர்த்ரைடிஸ் உள்ளவர்கள் விளக்கெண்ணெயை தடவி வந்தால் எலும்புகள் பலம் பெறும். மேலும் விளக்கெண்ணெய் கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்குகிறது. இது இணைப்பு திசுக்களுக்கு ஊட்டம் அளித்து, மூட்டுகளில் வரும் வாதத்தை வர விடாமல் தடுக்கிறது.

மலச் சிக்கல் : மலச் சிக்கல் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை சுத்தமான கலப்படமில்லாத விளக்கெண்ணெயை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், மலச்சிக்கல் என்பதே இருக்காது. குடலினை சுத்தம் செய்யும். பூச்சிகளை விரட்டும்.

மச்சத்தை அகற்ற : மச்சம் என்பது உடலில் பல செல்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் திரளாக ஒரு துணுக்கு போல தோன்றும். அவை பெரும்பாலும் பிரவுன் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.

சிலருக்கு முகத்தில் அந்த மச்சம் அழகாய் இருக்கும். சிலருக்கு முகத்தின் அழகினை கெடுக்கும். அந்த மச்சத்தினை அகற்ற, பார்லருக்கு சென்று லேசர் முறையிலோ, அல்லது மருத்துவரிடம் அறுவை சிகிச்சையிலோ நீக்குவார்கள். அவ்வளவு சிரமப் பட தேவையில்லை.

உங்கள் வீட்டில் விளக்கெண்ணெய் இருந்தால் போதும். விளக்கெண்ணெய் சருமத்தினுள் ஆழமாக ஊடுருவி, திரளாய் காணப்படும் செல்களின் மேல் செயல் புரிகிறது. பின்செல்கள் தனித் தனியாக பிரிந்து, நாளடைவில், மச்சம் மறைகிறது. விளக்கெண்ணெயை மச்சத்தின் மீது தேய்த்து வாருங்கள். நாளடைவில் மறைந்து விடும். இன்னும் வேகமாய் பலன் கிடைக்க, விளக்கெண்ணெயை சமையல் சோடாவுடன் கலந்து, மச்சத்தின் மீது தேயுங்கள். சில நாட்களில் மச்சம் மறைந்து விடும்.

குறிப்பு : கர்ப்பிணிகள் விளக்கெண்ணெயை உணவில் சேர்க்கக் கூடாது. அந்த காலத்தில் குழந்தைகளுக்கும் சிறிது தருவார்கள். ஆனால் குழந்தைகளுக்கும் தரக் கூடாது. காரணம் இப்போது விற்கப்படும் கடைகளில் கலப்படம் செய்த விளக்கெண்ணெயே கிடைக்கிறது. அவை உடலுக்கு மோசமான விளைவுகளை தருகிறது. செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெய் உபயோகித்தால் நல்லது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close