கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

Loading...

கார்போஹைட்ரேட் உணவுகள் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இது மதில் மேல் பூனையை போல, அதிகமாகவும் எடுத்துக்கொள்ள கூடாது, குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. அமிர்தம் போல சரியான அளவு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு தான் கார்போஹைட்ரேட் உணவுகள்.

வெள்ளை அரிசி சாதம், தானிய உணவுகள், உருளைக்கிழங்கு, வெண்ணெய் பழம் (Avocado), போன்றவை சிறந்த கார்போஹைட்ரேட் உணவுகள் என்று கூறப்படுகிறது. இனி, கார்போஹைட்ரேட் உணவுகள் கணிசமாக குறைத்துக் கொள்வதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்…

உடலில் நீரின் எடை குறையும்

கார்போஹைட்ரேட் உணவுகள் நீங்கள் குறைத்து சாப்பிடும் போது, உங்கள் உடலில் இருக்கும் நீர் எடை கணிசமாக குறையும்.

ஃப்ளூ காய்ச்சல்

கார்போஹைட்ரேட் தான் மூளைக்கான முக்கிய எனர்ஜி ஆகும். நீங்கள் கணிசமான அளவில் கார்போஹைட்ரேட் உணவுகள் உட்கொள்வதை குறைக்கும் போது, மூளைக்கு தேவையான எனர்ஜி கிடைக்காமல், சோர்வுறும் நிலை ஏற்படலாம். இதனால் கிளைக்கோஜன் அளவும் குறையும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் கொழுப்பும் நிறைய குறையும்.

விளைவுகள்

இதன் விளைவுகளாக, வாய் துர்நாற்றம், வாய் வறட்சி, சோர்வு, உடல் வலிமை குறைவு, தூக்கமின்மை, குமட்டல் போன்றவை ஏற்படலாம்.

பசி கார்போஹைட்ரேட் உணவுகள்

உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். அனால், இதை முற்றிலுமாக தவிர்க்கும் போது, பசி அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, இந்த சமயடஹில் நீங்கள் நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், நார்ச்சத்து உணவுகள் உங்கள் பசியின்மை மற்றும் பசி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடியது.

இதயம் மற்றும் நீரிழிவு பிரச்சனை

கார்போஹைட்ரேட் உள்ள சில தானிய உணவுகளை நீங்கள் தவிர்ப்பதனால், இதயம் மற்றும் நீரிழிவு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதிலும் முக்கிமாக டைப் 2 நீரிழிவு அதிகரிக்க தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். தானியங்கள், இதயம், உடல் பருமன், நீரிழிவு போன்றவையில் இருந்து காக்க கூடிய உணவுகள் ஆகும். எனவே, எக்காரணம் கொண்டும், இந்த உணவுகளை தவிர்த்தல் கூடாது.

எனர்ஜி குறையும்

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதால் உங்கள் உடலின் எனர்ஜி குறையும். தானிய உணவில் இருக்கும் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி போன்றவை தான் நமது உடலின் எனர்ஜியை பாதுக்காக்கின்றன. எனவே, தானிய உணவுகளை தவிர்ப்பது தவறு.

மலச்சிக்கல்

தானிய உணவுகள் மற்றும் அதில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல்களை தவிர்க்க உதவும், இந்த உணவுகளை நீங்கள் தவிர்க்கும் போது மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

மன நலம் அதிகரிக்கும்

நீங்கள் இந்த உணவுகளை சரியான முறையில், சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உங்கள் மனநிலை மேன்மையடையும். மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close