தேன் ஃபேஸ் வாஷ் ட்ரை பண்ணியிருக்கீங்களா? வீட்டிலேயே தயாரிக்கலாம்

Loading...

பழைய காலத்தில் உபயோகப்படுத்திய அழகுக் குறிப்புகளெல்லாம் பொக்கிஷங்கள். நமது பாட்டிகளின் அழகு மங்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய இயற்கை அழகு சாதனங்கள்தான்.

அப்படி ஓரளவிற்காவது அந்த காலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாமே அழகு சாதனங்களை தயாரிக்க முடியும். நீங்கள் ஃபேஸ் பேக், மாஸ்க், என பலவற்றையும் இயற்கையான பொருட்களை வைத்து உபயோகப்படுத்தி இருப்பீர்கள். அதுபோல, இந்த இயற்கை ஃபேஸ் வாஷை யும் முயற்சி செய்யுங்க.

தேன் சருமத்திற்கான அருமையான குணங்கள் கொண்ட பொருளாகும். இதனைக் கொண்டு செய்யப்படும், இந்த நீர்த்த சோப், அற்புத பலன்களைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

காரணம் அவற்றுடன் கலக்கும் எல்லாமுமே சருமத்தில் ஊடுருவும். அதன் குணங்களை நிரப்பும். அழகிய தோற்றத்தை வெளிக் கொண்டு வரும். ஆனால் கடைகளில் வாங்கும் ஃபேஸ் வாஷ் உங்கள் சருமத்தை பாதிக்கச் செய்யும்.

இதற்கு தேவையான பொருட்கள் தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் கேஸ்டைல் சோப் . இவை மூன்று மட்டுமே.

கேஸ்டைல் சோப் என்பது ஆலிவ் என்ணெய் மற்றும் பல மூலிகைகள் கலந்து செய்யப்பட்ட நீர்த்த சோப்பாகும். இவை சருமத்திற்கு எந்த வித கேடும் தராது. இவற்றைக் கொண்டு எப்படி செய்வது என இனி பார்ப்போம்

தேவையானவை : தேன் -3 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் -1 டீ ஸ்பூன் கேஸ்டைல் சோப் – 1 டீ ஸ்பூன்வாசனை என்ணெய்(பாதம், அல்லது லாவெண்டர், போன்ற எண்ணெய்) – 5-10 துளிகள்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு அவ்வப்போது தற்காலிகமாய் செய்து கொள்ளலாம். அல்லது இன்னும் அளவினைக் கூட்டி, அதிகமாய் செய்து, பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

இந்த ஃபேஸ் வாஷை முகத்தில் தேய்த்து, அழுக்கு சேரும் இடங்களில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

தினமும் இந்த நீர்த்த ஃபேஸ் வாஷைக் கொண்டு முகம் கழுவுங்கள். அழுக்குகள் நீங்கி, சருமத்தில் இருக்கும் துவாரங்கள் திறந்து, சருமம் சுவாசிக்கும்.

நுண்ணிய சுருக்கங்கள் கூட மறைந்து சருமம் பளிச்சிட வைக்கும் இந்த கலவை. நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப்பாருங்க. நிச்சயம் மாயாஜாலத்தை உணர்வீர்கள்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *