ஆண்களே! அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!

Loading...

ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பலரும் தவறாக நினைப்பது, எப்போதும் செக்ஸ் எண்ணத்துடன் இருப்பது என்று. ஆனால் உண்மையில், இது அதிகப்படியான உடல் சூடு, தூக்கமின்மை, உடுத்தும் உடை, தூங்கும் நிலை, உண்ணும் உணவுகள், சுய இன்பம் காணாமல் இருப்பது போன்றவற்றினால் தான் நிகழ்கிறது.

மேலும் ஆய்வுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தன் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது இப்பிரச்சனையை சந்தித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது. இப்பிரச்சனை அதிகமானால், அதனை சரிசெய்ய சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், தூக்கத்தின் போது படுக்கையில் விந்து வெளிவருவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது தூக்கத்தின் போது படுக்கையில் தானாக விந்து வெளிவருவதை தடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

தூங்கும் நிலை

சில ஆண்களுக்கு தூங்கும் நிலையின் காரணமாகவும் விந்து வெளியேற்றப்படும். அதுவும் குப்புறப் படுக்கும் போது, ஆண்குறி படுக்கையுடன் உராய்ந்து, அதனால் விந்து வெளியேற்றப்படுகிறது. எனவே ஆண்கள் இந்த நிலையைத் தவிர்க்க பக்கவாட்டில் (வலது அல்லது இடது புறத்தில்) அல்லது மல்லாக்க படுக்க வேண்டும்.

உணவு வகைகள்

காரமான உணவுகளை ஆண்கள் அதிகம் உட்கொண்டாலும், இரவில் தூக்கத்தில் விந்து வெளியேற்றப்படும். எனவே இப்பிரச்சனையை அதிகம் சந்திப்பவர்கள், இரவு நேரத்தில் காரமான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், மன அழுத்தம் மற்றும் டென்சன் குறையும். இதனால் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் படுக்கையில் தானாக விந்து வெளிவருவது குணமாகும்.

சேஜ் டீ

சேஜ் என்னும் மூலிகை தானாக விந்து வெளிவருவதற்கு நல்ல தீர்வைத் தரும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் சேஜ் மூலிகையைப் போட்டு தேநீர் தயாரித்து, இரவு உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இதனால் இரவில் நல்ல தூக்கமும் வரும்.

வெந்தயம் மற்றும் தேன்

உங்களுக்கு அடிக்கடி படுக்கையில் விந்து வெளிவந்தால், இந்த எளிய இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றுங்கள். அது என்னவெனில், ஒரு கப் டீயில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், இப்பிரச்சனையை குணமாக்கலாம்.

அதிமதுரம்

அதிமதுரம் கொண்டு டீ தயாரித்துக் குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், அளவுக்கு அதிகமாக விந்தணு உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்தி, இரவில் படுக்கையில் ஏற்படும் விந்தது வெளியேற்ற பிரச்சனையைத் தடுக்கும்.

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், இதயத்தை பலப்படுத்துவதோடு, ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விந்து தானாக வெளியேறுவதைத் தடுக்கும். எனவே தான் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள்.

தயிர்

தயிர் மற்றொரு சிறப்பான இயற்கை நிவாரணி. அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தயிரை உட்கொண்டு வருவது, இப்பிரச்சனையைத் தடுப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், தானாக இரவில் விந்து வெளிவருவதைத் தடுக்கும். அதற்கு நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து கலந்து தினமும் சிறிது குடித்து வாருங்கள்.

வெங்காயம்

பச்சை வெங்காயம் கூட தானாக விந்து வெளியேறுவதைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள அசிட்டிக் பொருள் தான் காரணம்.

சிவப்பு பழங்கள்

உடல்நல நிபுணர்கள், சிவப்பு நிற பழங்களானது ஆண்களின் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு வழங்குவதாக கூறுகின்றனர். அதிலும் செர்ரிப் பழங்கள், மாதுளை, ஆப்பிள் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், இது இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக விந்தணு உற்பத்தியாவதைத் தடுக்கும். இதனால் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்தணு வெளியேறுவது தடுக்கப்படும்.

உடல் வெப்பத்தை தூண்டக்கூடிய பழங்கள்

தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவதைத் தூண்டும் பழங்களில் ஒன்று தான் அவகேடோ பழம். இதுப்போன்று உடல் வெப்பத்தைத் தூண்டக்கூடிய பழங்களான அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றையும் இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close