உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் அரியவகை மூலிகைகள்

Loading...

மனிதர்கள் அன்றைய காலங்களில் இயற்கையான மூலிகை வகைகளையே நோயை குணப்படுத்தும் மருந்துகளாக உபயோகித்து வந்தது நாம் அறிந்ததே.

எமது நாடுகளிலிருந்து தற்போது மேற்கத்திய நாடுகளிலும் மூலிகை வகைகளால் ஆன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதோ சில அறியவகை மூலிகைகளும் அதன் பயன்களையும் காண்போம்

1.மிளகுக்கீரை (Peppermint)


சாதாரண தேநீர், கோப்பி பருகுவதை விட தற்போது மக்கள் மாற்றீடாக மிளகுக்கீரை தேநீரை அருந்திவருகின்றனர். புதினா இலை தேநீரைப்போல் சிறந்த புத்துணர்ச்சி பானமாக மிளகுக்கீரை தேநீர் விளங்குகிறது.

இது தசைகளை தளரச்செய்வது, குடல் நோய்களை தீர்ப்பது, மற்றும் உணவு செரிமானம் போன்றவற்றுக்கு மிளகுக்கீரை உதவுகிறது. மேலும் மிளகுக்கீரையில் உள்ள ஒருவித அண்டி-வைரஸ் பண்புகள் குளிர்புண் நோயை குணப்படுத்தக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

2.இச்சினா மூலிகைப்பூ (Echinacea)


சாதாரணமாக வீட்டுத்தோட்டங்களில் வளரக்கூடிய கூம்பு மலர் என அழைக்கப்படும் நாவல் நிற பூவகை சிறந்த மூலிகையாக விளங்குகிறது. இந்த இச்சினா மலரை மூலிகையாக உட்கொள்வதால் சளிக்காய்ச்சல் நோய் தவிர்க்கப்படுகிறது. ஏனனில் இம்மலர் வைரஸ் தொற்றுக்கு எதிராக செல்களை பாதுகாக்க உதவும் புரதசத்து நிறைந்தது. மேலும் சரும பராமரிப்புக்கும் வீக்கத்தை குறைக்கவும் உதவிபுரிகிறது.

3.அதிமதுரம் (Liquorice)


அதிகம் அறியப்படாத மூலிகையான அதிமதுரம் கருப்பை கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இது வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளிருந்து விடுபட உதவுகிறது.

4.முனிக்கீரை (Sage)


மற்றுமோர் சிறந்த கிருமி நாசினி வகைகளில் சிறந்ததாக விளங்கும் முனிக்கீரை பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. பற்பசையாகவும் பயன்படுத்தப்படுவதுடன் மூலிகை சரும கீரிம்களில் இக்கீரை சேர்க்கப்பட்டிருப்பது சின்னம்மை மற்றும் தழும்புகளை அகற்ற உதவுகிறது. மேலும் குளிர் நடுக்கத்தையும் போக்கவல்லது.

5.ஹோத்தோர்ன் (Hawthorne)


ஹோத்தோர்ன் எனப்படும் பெர்ரி வகைப்பழங்கள் இதய நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து சீரான இரத்தோட்டத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் பலவீனமான இதய தசைகளின் சிகிச்சை முறைக்கும் இம்மூலிகை பயன்படுத்தப்படுகிறது.

6.தைம் (Thyme)


நல்ல மணமுள்ள இலைகளை கொண்ட இச்செடி வகை குடலில் உண்டாகும் பக்டீரியாக்களை அழிக்கவல்லது. மேலும் தைம் செடி பூஞ்சை தொற்றுநோய்கள் மற்றும் நெஞ்சு மூச்சுக்குழாய் அழற்சி நோய்களின் நிவாரணியாக செயல்படுகிறது.

7.ரோஸ்மேரி (Rosemary)


ரோஸ்மேரிச் செடி உளவியல் நோய்களை கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது அல்சைமர் போன்ற நோய்களை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் நினைவாற்றலை அதிகரிச்செய்வது, மனச்சோர்வு, மன அழுத்தம், மன பதற்றம் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

8.கெமோமில் (Chamomile)

கெமோமில் எனப்படும் வெள்ளை இதழ்களை கொண்ட மூலிகைப்பூவை சூடான தேநீராக பருகினால் நல் தூக்கத்தை தூண்டுவதாக தெரிவிக்கின்றனர். அதாவது கெமோமில் தேநீர் அருந்துவதால், நரம்பு தளர்வை செயல்படுத்தி உடலில் அமினோ அமிலம் கிளைசின் அளவை அதிகரிக்கிறது. மேலும் தசைப்பிடிப்பு வலி மாதவிடாய் வலிகளையும் குறைக்க உதவுகிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *