உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது

Loading...

உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது
1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து, கைவீசம்மா கைவீசு என்று நடக்க வேண்டும்.

2. சரியான நடைப்பயிற்சியில் வியர்ப்பது இயல்பு. எனவே இறுக்கமான, பாலியெஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்து போகாமல், வியர்வையை உறிஞ்ச ஏதுவாக, தள‌ர்வான காட்டன் ஆடைகளை அணியவும்.

3. கால்களை மூடும் விதமாக, மென்மையாக பாதங்களை இறுக்காமல் ஷீ அணிந்து கொள்வது நல்லது.

4. மூளையில் ஏற்படும் செரோடினின் பகிர்ந்தளிப்பு, உடலில் என்சைம்களின் சுரப்பு.உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதயத் துடிப்பு சீராகி, ப்ரோஸ்டோகிளான்டின்களின் சுரப்பு மூலம், மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைத்து, தசைகளின் இலகுவாகி, உடலுக்கு தேவையான சக்தி சேமித்து வைக்கப்பட்டுள்ள கார்போஹைட்ரேட்டிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.

5. பிரிஸ்க் வாக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் மூலம் ஆக்சிஜன் சுழற்சி ஏற்பட்டு, சுமார் 6 கலோரிகள் செலவழிக்கப்படுகிறது.

6. முதல் 5 நிமிடங்களில் உடலுக்கு உற்சாகம், 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி, உடல் வியர்க்க துவங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.

7. சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி, கொழுப்பு சத்து எரிந்து, இன்சுலின் சுரப்பு சீராகும்.

8. ஒரு மணி நேரத்தில், நமது நடையின் வேகத்தை குறைக்க, இதயத் துடிப்பு சீராகி, வியர்வைகள் அடங்கி, அதன் பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.

9. அதிக பருமனானவர்கள், இதயம் பலகீனமானவர்கள், ஆஸ்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள், எலும்பு மற்றும் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்..அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று நடைபயிற்சியை தொடரலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close